சுவை நிறைந்த பேரிச்சம் பழம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வாரி வழங்குகிறது.பேரிச்சம் பழத்தில் போலேட்,இரும்பு,புரோட்டீன்,கால்சியம்,மெக்னீசியம்,நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி உள்ளிட்டவை அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.
பேரிச்சம் பழம் மட்டுமின்றி அதன் விதையிலும் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியிருக்கிறது.பேரிச்சம் பழத்தில் பிளாவனாய்டுகள்,பினோலிக் போன்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலம் பெறும்.
பேரிச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அல்சமைர் போன்ற நோய் பாதிப்புகள் குணமாகும்.பேரிச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்பு வலிமை அதிகரிக்கும்.உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.
அதிகாலை நேரத்தில் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.பேரிச்சம் பழம் குடற்புழுக்களை அழிக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பேரிச்சம் பழ பால் உதவுகிறது.
கல்லீரல் வீக்கம் குறைந்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த பேரிச்சம் பழ பால் பருகலாம்.அதேபோல் பேரிச்சம் பழத்தை வெண்ணையில் வறுத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
விந்து குறைபாடு,உடலுறவின் போது அதிக சோர்வு,விரைவில் விந்து வெளியேறுதல்,பாலியல் ஆர்வம் குறைதல்,ஆண்குறி பலம் குறைதல் போன்ற பிரச்சனைகளால் தவித்து வரும் ஆண்கள் பேரிச்சம் பழத்தை வெண்ணெயில் வறுத்து சாப்பிடலாம்.
பேரிச்சம் பழ விதையை நீக்கிவிட்டு அதன் சதை பற்றை வாணலியில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் வெண்ணெய் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து ஆறவிட்டு சாப்பிடலாம்.அல்லது வெண்ணையில் வறுத்த பேரிச்சம் பழத்தை பாலில் கலந்து பருகலாம்.அதேபோல் பேரிச்சம் பழத்தை வெண்ணையில் வறுத்து ஆறவைத்து தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் ஆண்மை அதிகரிக்கும்.எனவே பேரிச்சம் பழத்தின் நன்மைகள் கிடைக்க அப்படியே சாப்பிடாமல் இதுபோன்று செய்து சாப்பிடுங்கள்.