உலகில் மிக வேகமாக செல்லும் ரயில் எது தெரியுமா?? நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க!!

Photo of author

By CineDesk

உலகில் மிக வேகமாக செல்லும் ரயில் எது தெரியுமா?? நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க!!

இந்த உலகில் மிக வேகமாக செல்லும் ட்ரெயின் சீனாவிலுள்ள சாங்காய் மேகலேவ் ட்ரெயின் ஆகும். மேலும் இந்த ட்ரெயின் மணி நேரத்திற்கு நானூத்தி முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறதாம். ஆனால் இது ஒரு விடயம் இல்லை. இந்த ரயிலின் வேகத்திற்கு இணையாக நம் மனிதர்களின் மூளை வேலை செய்கிறதாம். எனவே இனி உங்களால் முடியாது என்று எண்ணி எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருக்க வேண்டாம். சிறிது கடின உழைப்பு செய்து உங்கள் மூளையை பயன்படுத்தி செய்து முடியுங்கள்.

மேலும் இந்த உலகில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கேமரா லென்ஸ்களை ஒப்பிடும்போது டிஎஸ்எல்ஆர் கேமராவின் லென்ஸ்ன் மெகாபிக்சல் தான் உயர்ந்தது. என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் அந்த விலையுயர்ந்த டிஎஸ்எல்ஆர் கேமராவின் லென்ஸ் 50 மெகாபிக்சல் அளவுதான் கொண்டுள்ளது. ஆனால் மனிதர்களின் கண்களின் மெகாபிக்சல் அளவு எவ்வளவு தெரியுமா? மனிதர்களின் கண்களில் மெகாபிக்சல் அளவு 576 என்று கூறுகின்றனர். நாம் காணும் அனைத்து காட்சிகளும் மிகவும் பிரமாண்டமாகவும், அழகாகவும் உள்ளது அந்த காட்சிகளை என்ன தான் விலை உயர்ந்த கேமராக்களில் பதிவு செய்தாலும் அது நாம் நேரில் காணும் காட்சிக்கு ஈடாகாது.

இதனால்தான் நம் நேரில் காணும் காட்சிகள் அனைத்தும் இவ்வளவு பிரமாண்டமாகவும், அழகாகவும் தோற்றமளிக்கிறது. மேலும் நம் கண்களால் பார்க்கக்கூடிய விஷயத்தை நம் கண் வீடியோவாக பதிவிட முடிந்தால் அந்த வீடியோ பதிவுன் ஒரு வினாடி வீடியோ மட்டுமே 21.45 ஜிபி என்று கூறுகிறார்கள். மேலும் இந்த ஆராய்ச்சியை மிகப்பெரிய சயின்டிஸ்ட் போட்டோகிராபர் ரோஜர் கிளாக் கூறுகிறார்.