எவை எல்லாம் நல்ல சகுனம் என்று தெரியுமா?
1)காகம், கிளி, கோழி ஆகியவை நீங்கள் நிற்கும் இடத்தில் இருந்து இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் பறந்தால் நல்ல சகுனம். நீங்கள் செய்ய உள்ள காரியங்கள் வெற்றியடையும் என்று அர்த்தம்.
2)குரங்கு, கீரி, கழுகு ஆகியவை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாக போனால் நல்ல சகுனம் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அனைத்து சுப காரியங்களும் நடக்கும்.
3)மனதில் ஒரு விஷயத்தை நினைத்தல் அல்லது பேசிக் கொண்டிருக்கும் பொழுது நாய் துலுத்தால் நடக்கும்.
4)சுப நிகழ்வுக்காக செல்லும் பொழுது சுமங்கலி பெண், கல்யாணம் ஆகாத பெண்ணை பார்த்தால் நல்ல சகுனம்.
5)நாய், காளை மாடு, திருவிழா, தேர் ஆகியவை சுபகாரியங்களுக்கு செல்லும் போது தென்பட்டால் நல்ல சகுனம்.
6)நிறை குடம், மணமக்கள் தென்பட்டால் நல்ல சகுனம்.
7)பிணம் எதிர் வருதல், அழுக்கு துணி தென்படுதல் ஆகியவை நல்ல சகுனம்.
8)கோயில் மணி ஓசை கேட்டல், மாட்டு சாணம் தென்படுதல்ஆகியவை நல்ல சகுனம்.
9)ஒரு பெண் நல்ல காரியம் பற்றி பேசும் பொழுது அல்லது நினைக்கும் பொழுது ஆணும், ஒரு ஆண் நல்ல காரியம் பற்றி பேசும் பொழுது அல்லது நினைக்கும் பொழுது ஒரு பெண்ணும் தும்மினால் நிச்சயம் நினைக்கும் காரியம் வெற்றி அடையும்.