உயிரைப் பறிக்கும் பாத்திரங்கள் எது தெரியுமா!! இனி இதில் சமைத்து சாப்பிடாதீர்கள் ஆபத்து!!

0
138

உயிரைப் பறிக்கும் பாத்திரங்கள் எது தெரியுமா!! இனி இதில் சமைத்து சாப்பிடாதீர்கள் ஆபத்து!!

பாத்திரங்களில் இருக்கு ஆரோக்கியம் நமது உடலின் ஆரோக்கியம். எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது ஆரோக்கிய வாழ்விற்கு அவசியமாகிறது. எப்பொழுதும் நாம் சமைக்கும் உணவுகள், காய்கறிகள், அதில் சேர்க்கப்படும் பொருட்கள் தினமும் சாப்பிடும் உணவு, சரிவிகிதத்தில் இருக்கிறதா, சத்தானதா என்று யோசிக்கும் நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் சரியானவைதானா என்று யோசிப்பது இல்லை. நாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல, சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்களும் நம் உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன எனவே எந்த பாத்திரத்தில் சமைத்தால் ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

அலுமினியம்-எல்லா நாட்களிலும் அதிக வெப்பத்தோடு இதில் சமைக்கும்போது இந்த பாத்திரங்களிலிருந்து கருப்பு வெளியில் இருந்தால் மட்டும்தான் ஆபத்து அதனால் பதமாக சமைத்து வேறு பாத்திரங்களுக்கு மாற்றி விடுவது நல்லது. இதில் டீ போடுவது, உப்பு சேர்த்து சமைக்கும் போதும் அதில் இருக்கும் அமிலமும் அலுமினியமும் வினைபுரிந்து உணவின் சத்துக்களை இழக்க செய்யும்.

சில்வர் பாத்திரம்-நிக்கல், குரோமியம் போன்ற வேதிப்பொருட்கள் சில்வர் பாத்திரத்தில் கலந்து இருக்கின்றன. இவை அதிக பாதிப்பு உண்டாக்குவதில்லை. அதேபோல் எவ்வித நன்மையும் இல்லை.

செம்பு பாத்திரம்-செம்பு பாத்திரத்தில் சமைக்கும் போது உணவு நீண்ட நேரம் மிதமான சூட்டில் இருப்பதால் உணவின் தன்மை மாறுவதில்லை. மூட்டு வலி ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உருவாக்காது. செம்பு பாத்திரத்தில் சமையல் செய்து சாப்பிடுபவர்களுக்கு அடிபட்டாலும் காயம் விரைவில் ஆறும் திறன் உண்டு.

வெண்கல பாத்திரம்-வெண்கலத்தில் சமைப்பதால் உடல் சோர்வுகள் நீங்கும். இதில் சமைக்கும் உணவுகள் வயிற்றுக்கு பிரச்சனை தராது. ஃபுட் பாய்சன் என்ற பிரச்சனை எட்டிக் கூட பார்க்காது இதில் சமைத்து உண்ணும் போது, ஆகையால் இந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுங்கள் உடல் ஆரோக்கியம் பெறலாம்.

இரும்பு பாத்திரம்-இரும்பு பாத்திரங்களில் வெப்பம் சீராக பரவும். இரும்புச்சத்து உணவோடு கலந்து உடலில் ரத்த சோகை இல்லாமல் செய்யும். இரும்பு, ஜிங்க், தாமிரம் போன்றவை நம் உடலுக்கு தேவையான சத்துக்கள். ஆகையால் இந்த பாத்திரத்தில் உணவு சமைத்து உண்ணும் பொழுது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து உடல் ஆரோக்கியம் பெற்று மகிழலாம்.

 

 

Previous articleவீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென  நேர்ந்த விபரீதம்!! 
Next articleஇதை பாலில் கலந்து குடித்தால் போதும் முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் தீரும்!!