உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா என்கின்ற கொடிய நோய் இந்தியாவிலும் பரவி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. அதை தடுப்பதற்கு அரசு தரப்பில் பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி இந்தியாவிலும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. முதன்முதலில் இந்த தடுப்பூசி யாருக்கெல்லாம், எவ்வாறு அளிக்கப்படும் என்பது குறித்த ஆலோசனைகளும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
அதாவது மருத்துவர் வி.கே.பால் தலைமையில் தடுப்புமருந்து நிர்வாக தேசிய நிபுணர் குழு, கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் முதன்முதலில் முன்னணி களப்பணியாளர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் மருந்தை அளிக்கப்போவதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும், புதிதாக கண்டுபிடிக்க கூடிய இந்த கொரோனா தடுப்பு மருந்தை ஒரே நேரத்தில் அளிப்பது என்பது சாத்தியமாகாது” என்று கூறியுள்ளாராம்.