இன்று பெரும்பாலான பெண்கள் எலும்பு பலவீனப் பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர்.ஆண்களைவிட பெண்களுக்கு எலும்பு வலிமை குறைவாக இருக்க பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.மாதவிடாய்,கருத்தரித்தல்,ஈஸ்டிரோஜன் ஹார்மோன் போன்ற பல காரணங்களால் எலும்பு அடர்த்தி குறைகிறது.
பெண்களுக்கு எலும்பு பலவீனமாக இருக்க காரணம்:
1)ஈஸ்டிரோஜன் ஹார்மோன் பிரச்சனை
பெண்களின் எலும்பு வளர்ச்சிக்கு ஈஸ்டிரோஜன் ஹார்மோன் பங்கு முக்கியமான ஒன்று.இந்த ஹார்மோன் அளவில் மாற்றம் ஏற்பட்டால் எலும்பு அடர்த்தி குறையும்.
2)கால்சியம் குறைபாடு
உடலில் கால்சியம் சத்து குறைந்தால் எலும்பு பலவீனப் பிரச்சனையை அனுபவிக்க நேரிடும்.வைட்டமின் டி குறைபாடு இருந்தால் எலும்பு பலவீனப் பிரச்சனை ஏற்படும்.
3)வயது
பெண்களுக்கு வயதாகும் பொழுது எலும்பு பலவீனப் பிரச்சனை ஏற்படும்.பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின்னர் ஹார்மோன் பிரச்சனை ஏற்படும்.இதனால் எலும்புகள் வலிமை குறையும்.
4)புகைப்பழக்கம்
மது மற்றும் புகைப்பழக்கம் இருக்கும் பெண்களுக்கு எலும்பு பலவீனப் பிரச்சனை ஏற்படும்.
எலும்பு வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:
கருப்பு உளுந்து கஞ்சி,கருப்பு உளுந்து களி,ராகி களி,ராகி கஞ்சி போன்றவற்றை உணவாக சாப்பிட்டு வந்தால் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்.
கால்சியம்,இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.எண்ணெய் உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.