தனது கில்லாடி தனத்தால் இருக்குற வேலையும் போச்சி ! ஈரோட்டில் தலைமை அரசு மருத்துவரின் அதிர்ச்சி செயல்!

Photo of author

By Parthipan K

தனது கில்லாடி தனத்தால் இருக்குற வேலையும் போச்சி ! ஈரோட்டில் தலைமை அரசு மருத்துவரின் அதிர்ச்சி செயல்!

ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி என்ற அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவராக என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த தலைமை மருத்துவருடன் முதுநிலை உதவி மருத்துவர்களாக அசோக் வினோத்குமார் சரவணகுமார் சண்முகவடிவு மற்றும் பத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் சில நாட்களுக்கு முன்பு விதிமுறைகளின்படி விடுப்பு அளிக்காமல் அனைவரும் சேர்ந்து சுற்றுலாப் பயணமாக ஒகேனக்கல் சென்றுள்ளனர். அவ்வாறு சுற்றுலா சென்ற தலைமை மருத்துவர் தனக்கு மாற்றாக மருத்துவம் படிக்கும் தனது மகன் அஸ்வின் என்பவரை மருத்துவராக தனது பணிகளை செய்யுமாறு நியமித்துள்ளார்.

மேலும் இவரது மகன் மருத்துவம் பார்த்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலானது. இந்த ஆதாரமானது ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி பக்கமும் திரும்பியது. மருத்துவர் மாற்றத்தில் குறித்து விசாரணை செய்யும் வழி மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதிக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.ஆட்சியர் விசாரணை செய்ததில் அவரது மகன் மருத்துவம் பார்த்து உறுதி செய்யப்பட்டது.

பணி நேரத்தில் பணியில் இல்லாததால் பெண் மருத்துவர் சண்முகவடிவு மற்றும் தலைமை மருத்துவர் தினகரன் இரண்டுபேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தலைமை மருத்துவர் மகனிடம் சிகிச்சை பெற்ற சில நோயாளிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் தலைமை மருத்துவர் மகன் அஸ்வின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.