நீங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற வேண்டுமா? இதுவே கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!

0
250
Do you need to get your 10th and 12th class certificate? This is the last day, apply now!
Do you need to get your 10th and 12th class certificate? This is the last day, apply now!

நீங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற வேண்டுமா? இதுவே கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற என் டி சி , என் ஏ சி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை போலவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று மேலே கூறப்பட்டுள்ள சான்றிதழ்களை பெற்றால் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12 ஆம் வகுப்பு சான்றிதழை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மொழி தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி அடைந்து தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் பெற விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக அனைத்து விவரங்களும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணபதாரர்கள் உரிய தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமகனுக்கு பதவி கொடுத்தது தாப்பாகிவிட்டதோ?? உதயநிதி பக்கபலத்தை காட்டிய இளைஞர் அணி நிர்வாகிகள்.. கடுப்பான ஸ்டாலின்!!
Next articleஐஎஸ்ஐ அமைப்பில் இணைய தயாரான அல்கொய்தா பயங்கரவாதி பெங்களூரில் கைது! அதிரடி நடவடிக்கை எடுத்த என்ஐஏ!