ஐஎஸ்ஐ அமைப்பில் இணைய தயாரான அல்கொய்தா பயங்கரவாதி பெங்களூரில் கைது! அதிரடி நடவடிக்கை எடுத்த என்ஐஏ! 

0
191
#image_title

ஐஎஸ்ஐ அமைப்பில் இணைய தயாரான அல்கொய்தா பயங்கரவாதி பெங்களூரில் கைது! அதிரடி நடவடிக்கை எடுத்த என்ஐஏ! 

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த பயங்கரவாதி இன்று பெங்களூரில் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார்.

என்.ஐ.ஏ எடுத்த அதிரடி நடவடிக்கையால் பெங்களூரில் இருந்த சாப்ட்வேர் இன்ஜினியரான பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு நாட்டில் தடை செய்யப்பட்டு இயக்கங்களில் ஒன்றாகும். இந்த இயக்கத்தில் தொடர்புடைய சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் வைத்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அந்த நபரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.

அவரது பெயர் ஆரிப். அவர் பெங்களூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பயங்கரவாத அமைப்புடன் 2 ஆண்டுகளாக ஆன்லைன் வழியே தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

அவரிடம் மேலும் தீர விசாரணை செய்ததில் ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு செல்ல விரும்பியுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார். அவருடைய அடுத்த கட்ட திட்டம் என்ன? வேறு என்ன திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.