உங்களில் சிலருக்கு வாய் பகுதியில்(நாக்கு) அடிக்கடி கொப்பளம்,சிவந்து போதல்,தடிப்பு போன்றவை ஏற்பட்டு சிரமம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்ந்தால் நாக்கு எரிச்சலடைவதோடு சுவை உணர்வு பாதிக்கப்படும்.
இதுபோன்று நாக்கு தொடர்பான பாதிப்பை 3 இல் 1 பங்கினர் சந்திக்கின்றனர்.நாக்கில் ஏற்படும் பாதிப்புகள் அதிக எரிச்சல் மற்றும் வலியை உண்டாக்கினாலும் அவை ஒரு வாரத்திற்கு பிறகு இயற்கையாகவே மறைந்துவிடும்.
நாக்கில் உண்டாகும் பாதிப்புகள்:
1)நாக்கு கடித்தல்
2)புற்றுநோய்
3)கார உணவுகள்
4)ஈஸ்ட் தொற்று
5)வாய்ப்புண்
6)ஒவ்வாமை
7)வாய் சுகாதாரமின்மை
8)நாக்கில் அழுக்கு படிதல்
உண்ணும் உணவுப் பொருட்கள் நாக்கில் படியும் போது அவை வெள்ளைத்திட்டுகளாக படிந்துவிடும்.இதை ஜியோகிராபிக் டங்க் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.இந்த பாதிப்பு வைட்டமின் பி குறைபாட்டால் ஏற்படக்கூடும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு,மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளுதல் போன்ற காரணங்களால் நாக்கில் இருக்கின்ற நல்ல பாக்டீரியாக்களின் அளவு குறைந்து பூஞ்சை தொற்று ஏற்பட்டுவிடும்.இந்த வெள்ளைப்படலம் நீண்ட நாட்களாக படிந்திருந்தால் அவை நாளடைவில் புற்றுநோய் பாதிப்பை உண்டாக்கிவிடும்.எனவே பல் துலக்கிய பிறகு டங்க் க்ளீனர் பயன்படுத்தி நாக்கில் இருக்கின்ற அழுக்குகளை நீக்க வேண்டும்.உணவு உட்கொண்ட பிறகு டங்க் க்ளீனர் பயன்படுத்தி நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.ஒருவேளை நாக்கில் படிந்திருக்கும் வெள்ளை படலங்கள் அகலவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.