அடிக்கடி ஐஸ் வாட்டர் குடிக்கும் பழக்கம் இருக்கின்றதா? அப்போ உங்கள் மூளைக்கே பிரச்சனை தான்!!
வெயில் காலங்களில் தாகம் அதிகமாக இருக்கும் என்பதால் ஐஸ் வாட்டர் சிறிதளவு குடிக்கலாம். அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதுவும் மிதமாக குளிர்ச்சியாக இருக்கும் ஐஸ் தண்ணீரை மட்டுமே அருந்த வேண்டும்.
ஆனால் ஒரு சிலருக்கு வெயில் காலமாக இருந்தாலும் மழை காலமாக இருந்தாலும் தொடர்ந்து குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பார்கள். இவ்வாறு தொடர்ந்து குளிர்ச்சியான தண்ணீரை குடிக்கும் பொழுது பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. அது என்னென்ன என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்…
* தொடர்ந்து குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பதால் நமக்கு தொண்டை பாதிப்பு ஏற்படும். அதாவது தொண்டையில் புண் ஏற்படுவது இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
* தொடர்ந்து குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால் நமக்கு மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படும்.
* தொடர்ந்து குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால் இதயத் துடிப்பை குறைக்கின்றது.
* தொடர்ந்து அதிகமாக குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால் செரிமான. அமைப்பு பாதிக்கப்படும்.
* உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் அனைவரும் குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பதை நிறுத்த வேண்டும்.
* குளிர்ச்சியான தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் மூளை உறைதல் பிரச்சனை ஏற்படும்.