கால் அடிக்கடி மரத்துப் போகின்றதா? உங்கள் உடம்பில் இந்த சத்து குறைவாக உள்ளது!
தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. நம் உடலுக்கு கால்சியம் சத்து மிகவும் முக்கியமானது.
நமது பற்கள் மற்றும் எலும்புகள் ஆரோக்கியமானதாக இருக்க இந்த கால்சியம் சத்து மிகவும் அவசியம்.நாளொன்றுக்கு நம் உடலுக்கு இந்த கால்சியம் சத்தானது 1000
மில்லிகிராமிலிருந்து 2000 மில்லி கிராம் வரை தேவைப்படுகின்றது.ஒருவருக்கு உடலில் இந்த கால்சியம் குறைபாடு இருக்கிறதா என்பதனை காட்டும் அறிகுறிகள்.
நம் உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால் முதலில் மூட்டு வலி, முதுகு வலி, எலும்புகளில் தேய்மானம் உண்டாகும். இது போன்ற எலும்புகள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இது மட்டுமின்றி பற்கள் மற்றும் ஈறுகளில் ரத்த கசிவு மற்றும் பற்கள் பலவீனமாக காணப்படும்.மேலும் கால்கள் மரத்து போதல், தசைப்பிடிப்பு, நகங்கள் உடைந்து போதல், சீரற்ற இதயத்துடிப்பு
இதுபோன்ற பிரச்சினைகளும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இது மட்டுமின்றி உடல் வளர்ச்சி குறைபாட்டிற்கும் காரணமாகிறது.
நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் கால்சியம் உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் போதுமானது.இதன் மூலம் நம் உடம்பில் கால்சியம் சத்தை மிக எளிதில் அதிகப்படுத்தி விடலாம்.