நீங்கள் அடிக்கடி கை கால் மரத்து போதலை அனுபவிக்கிறீங்களா? இதற்கான காரணங்களும் உரிய வீட்டு வைத்தியமும்!!

Photo of author

By Divya

உடலில் இரத்த ஓட்டம் தடைபடும் பொழுது கை,கால் மரத்து போதல் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல்,கை,கால்கள் தொங்கிய நிலையில் இருத்தல்,கை கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுதல் போன்ற காரணங்களால் மரத்து போதல் பாதிப்பு ஏற்படுகிறது.

கை கால் மரத்து போக காரணங்கள்:

1)நரம்பு பாதிப்பு
2)நரம்பு அழுத்தம்
3)தோல் பாதிப்பு
4)இரத்த ஓட்டம் தடைபடுதல்
5)தைராய்டு ஹார்மோன் குறைபாடு
6)உடலில் அதிக கொழுப்பு சேருதல்
7)மதுப்பழக்கம்
8)வைட்டமின் பி பற்றாக்குறை

கை கால் மரத்து போதல் அறிகுறிகள்:

1)நீரிழிவு நோய்
2)தைராய்டு
3)நரம்பு வீக்கம்

கை கால் மரத்து போதலை சரி செய்யும் உணவுகள்:

1.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் கை,கால் மரத்து போதல் பாதிப்பில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.கடல் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.

2)உலர் விதைகளான பாதாம்,முந்திரி,வால்நட்,திராட்சை போன்றவற்றை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கை,கால் மரத்து போதல் பிரச்சனை சரியாகும்.

3)சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை,ஆரஞ்சு,சாத்துக்குடி போன்ற பழங்களின் சாறை பருகி வந்தால் கை கால் மரத்து போதல் குணமாகும்.

4)உணவில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்துக் கொண்டால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.இதனால் கை,கால் மரத்து போதல் ஏற்படுவது தடுக்கப்படும்.தினமும் ஒரு கிளாஸ் வெங்காய தேநீர் அல்லது பூண்டு தேநீர் செய்து பருகி வந்தால் கை கால் மரத்து போதல் பாதிப்பு குறையும்.

5)உணவுமுறை பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.இரத்த ஓட்டத்தை சீராக்கும் உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.