சிலருக்கு அடிக்கடி தலைசுற்றல்,கிறுகிறுப்பு போன்றவை ஏற்படுகிறது.இந்த பிரச்சனை அடிக்கடி வருவதால் மூளையில் ஏதேனும் பிரச்சனை வந்து விட்டதா என்று எண்ணி பலரும் அஞ்சுகின்றனர்.தலைசுற்றல்,கிறுகிறுப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட காரணம் காது தான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காது என்ற உறுப்பு சத்தம் மற்றும் பிறர் பேசுவதை கேட்க மட்டும் இல்லை இது உடல் உறுப்புகளை சமநிலை படுத்தவும் உதவுகிறது.இந்த காது மூன்று பகுதிகளை கொண்டிருக்கிறது.அதாவது உள்காது,வெளிக்காது மற்றும் நடுக்காது என்று மூன்று பகுதிகளை உடையது.
காது சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் பொழுது கிறுகிறுப்பு,தலைசுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.காதுகளில் பிரச்சனை ஏற்பட்டால் உடல் சமநிலையை இழக்கும்.இதனால் தலைசுற்றல் பிரச்சனை ஏற்படும்.இதை Vertigo என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.
இந்த பிரச்சனை 30 வயதை கடந்தவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.இந்த கிறுகிறுப்பு,தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளை ஆண்களைவிட பெண்கள் தான் அதிகமாக சந்திக்கின்றனர்.இந்த பாதிப்பால் உயிர் சேதம் ஏற்படாது என்பது ஆறுதல் தரக் கூடிய விஷயமாகும்.
தலைசுற்றல் பாதிப்பில் மூன்று வகை இருக்கிறது.முதலில் லேசான தலைசுற்றலுடன் குமட்டல் பிரச்சனை இருக்கும்.அடுத்து தலைசுற்றலுடன் வாந்தி பிரச்சனையை அனுபவிக்க நேரிடும்.மூன்றாவதாக அதிகப்படியான தலைவலி மற்றும் அதிகப்படியான வாந்தி பிரச்சனை ஏற்படும்.இந்த மூன்றாவது நிலை தான் இருப்பதில் மிகவும் ஆபத்தான நிலை ஆகும்.
இந்த கிறுகிறுப்பு,தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளை சாதாரண விஷயமாக கருதி அலட்சியம் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்வது உங்களுக்கு நல்லது.சிலர் சாதாரண தலைசுற்றல் என்று நினைத்து உடலை கவனிக்க தவறுகின்றனர்.இதனால் பின்னாளில் கடுமையான பக்க விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.எனவே தலைசுற்றல்,கிறுகிறுப்பு போன்ற பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது என்றால் அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.