உங்களுக்கு சுவாசம் தொடர்பான பிரச்சனை இருந்தால் அதை குணப்படுத்திக் கொள்ள இஞ்சி,மஞ்சள் போன்ற மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:-
1)இஞ்சி துண்டு – ஒன்று
2)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
4)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் நீங்கள் ஒரு துண்டு இஞ்சி எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதன் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகளை போட்டு கொதிக்க வையுங்கள.பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இதை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவு தேன் கலந்து பருகி வந்தால் சளி,இருமல்,சுவாசம் சம்மந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளும் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)சுக்கு – ஒரு துண்டு
2)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
அதன் பிறகு இந்த சுக்கு தூளை கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.
இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.
அதேபோல் கருமிளகை இடித்து தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் சளி,இருமல் பிரச்சனை குணமாகும்.தினமும் துளசி இலைகளை பறித்து சாப்பிட்டு வந்தால் சுவாசப் பிரச்சனை வராமல் இருக்கும்.