அடிக்கடி நாக்கில் புண் வருதா? அப்போ இந்த நோயின் தாக்கமாக இருக்கலாம்! 

Photo of author

By Rupa

உணவின் சுவை அறையும் உறுப்பான நாக்கில் அடிக்கடி கொப்பளம் வந்தால் அலட்சியம் கொள்ளாதீர்கள். வாய் மற்றும் நாக்கில் வரும் புண்களுக்கு வித்தியாசம் இருக்கிறது. இவ்விரண்டு புண்கள் வந்தாலும் உணவு சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும். அதேபோல் தண்ணீர் குடிக்கும் போது அதிக வலியை அனுபவிக்க நேரிடும்.
நாக்கில் புண் வந்தால் சிலர் கை வைத்தியம் மூலம் சரிசெய்துவிட நினைப்பார்கள். நாவில் சிறு புண்கள் இருந்தால் பெரியளவில் பாதிப்பு இல்லை. ஆனால் இந்த புண்கள் உருவானால் அதிக அசௌகரியத்தை உண்டாக்கும். நீங்கள் பல் துலக்கும் போது நாக்கில் உள்ள அழுகுகளையும் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் நாவில் நோய் தொற்றுகள் உருவாகி புண்களை உண்டாக்கும்.
சிலருக்கு அல்சர் பாதிப்பு இருந்தால் நாக்கு மற்றும் வாயில் சிறு சிறு கொப்பளங்கள் உருவாகும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், காரம் நிறைந்த உணவுகள், தொற்றுகள், வைட்டமின் குறைபாடு போன்ற காரணங்களாலும் நாக்கு மற்றும் வாயில் புண்கள் உருவாகிறது.
பொதுவாக நாக்கில் புண்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான் என்றாலும் அவை அடிக்கடி ஏற்பட்டால் அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது. வயிற்றில் புண்கள் இருந்தாலோ, குடல் நோய், கல்லீரல் பிரச்சனை இருந்தாலோ நாக்கில் புண்கள் உருவாகும்.
அதிகளவு தண்ணீர் குடித்தல், பச்சை காய்கறிகளை உட்கொள்ளுதல், இளநீர், தயிர், மோர் போன்ற இயற்கை பானங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.