உடலில் அதிகப்படியான சூடு இருந்தால் கண் பொங்கும்.கண்களில் அழுக்கு சேர்ந்தால் அவை பூளையாக கண் ஓரம் ஒதுங்கும்.இது குழந்தைகள்,பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்படுகின்ற ஒரு இயல்பான விஷயம் தான்.
ஆனால் அளவிற்கு அதிகமாக கண் பொங்கினால் அது இயல்பான விஷயம் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.கண் எரிச்சல்,கண் சூடு அதிகமாக இருந்தால் கண் பொங்கும்.குழந்தைகளுக்கு கண் பொங்குதல் அடிக்கடி நிகழ்கிறது.
ஒவ்வாமை,உடல் சூடு,தூசு,அழுக்கு உள்ளிட்ட காரணங்களால் கண்களில் அதிகளவு வெள்ளை பூளை வெளியேறுகிறது.அதிக நேரம் மொபைல்,கணினி போன்றவற்றை பார்ப்பதால் கண்கள் சூடாகி அதிக எரிச்சல் உணர்வு ஏற்படும்.இதனால் நிம்மதியற்ற தூக்கத்தை அனுபவிக்க நேரிடுகிறது.இதன் காரணமாகவும் கண்களில் அதிகளவு பூளை பொங்குகிறது.கண் சூடு குறைய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தினமும் இரவு செய்து வரவும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் கண்களை சுற்றி சிறிது தேங்காய் எண்ணெயை அப்ளை செய்யவும்.இவ்வாறு செய்தால் கண் சூடு குறைவதோடு அதிக பூளை வெளியேறுவதும் கட்டுப்படும்.
தினமும் காலையில் எழுந்த உடன் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் அதிகளவு கண் பீளை வெளியேறுவது கட்டுப்படும்.கண்களை சுற்றி விளக்கெண்ணெய் வைத்தால் சூடு குறையும்.இதனால் கண் பொங்கும் பிரச்சனை குறையும்.
தொப்பிளில் விளக்கெண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் கண் எரிச்சல்,கண் வலி,கண் சூடு குறையும்.தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளித்தால் கண் சூடு மற்றும் கண் பொங்குதல் குறையும்.