அடிக்கடி தலை சுளீர்ன்னு வலிக்குதா? அப்போ இந்த பொருளை தரையில் உரசி தலையில் தேயுங்கள்!!

0
66

சளி,காய்ச்சல் போன்ற பிரச்சனை இருந்தால் கூடவே தலைவலியும் சேர்ந்துவிடும்.சிலருக்கு தூக்கமின்மை,மன அழுத்தம்,கோபப்படுதல் போன்றவற்றால் தலைவலி மற்றும் தலைபாரம் ஏற்படும்.

ஆனால் சிலருக்கு காரணமே இல்லாமல் தலைவலி வாட்டி எடுக்கும்.தலைக்குள் கூர்மையான ஆயுதத்தை வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்படுவதை தான் தலைவலி என்கின்றோம்.இந்த தலைவலி நம்மை ஒரு பதம் பார்த்துவிட்டு தான் போகும்.சிலர் ஒற்றை தலைவலி,தலையில் பிக்க பகுதியில் மட்டும் வலி உணர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

சிலர் அதிக நேரம் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் தலைவலி பிரச்சனையை சந்திக்கின்றனர்.எப்படிப்பட்ட தலைவலியையும் நம் சித்த வைத்திய முறைகள் மூலம் எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.

1)சாதாரண தலைவலி பாதிப்பாக இருந்தால் ஒரு துண்டு சுக்கை வைத்து தீர்வு கண்டுவிடலாம்.முதலில் சுக்கை நெருப்பில் சிறிது நேரம் வாட்டி எடுத்து தரையில் வைத்து உரச வேண்டும்.பிறகு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து நெற்றி மீது பற்றுப்போட்டால் தலைவலி விடும்.

2)அதேபோல் சுக்கை பொடித்து ஒரு பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் தலைவலி நீங்கும்.

3)சுக்கு மற்றும் கடுக்காயை பொடித்து நீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் தலைவலி நீங்கும்.

4)ஒற்றைத் தலைவலி பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் சுக்கை பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

5)தீராத தலைவலியால் அவதியடைந்து வருபவர்கள் சுக்கை நெருப்பில் போட்டு சுட்டு அதன் தோலை நீக்கிவிட்டு பிறகு மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.இந்த சுக்குப் பொடியை சூடான பசும் பாலில் கலந்து பருகி வந்தால் தலைவலி நீங்கும்.

6)சுக்கு,துளசி மற்றும் கற்பூரத்தை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் கடும் தலைவலியில் இருந்து விடுபட்டு விடலாம்.

7)சுக்கு மற்றும் கற்பூரத்தை பொடித்து கிராம்பு எண்ணெயில் போட்டு சூடாக்கி நெற்றிப் பகுதியில் தடவி வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.

8)பாலில் சுக்கை ஊறவைத்து தரையில் இழைத்து நெற்றிப் பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் தலைவலி தீரும்.

9)தலைபாரம் நீங்க தண்ணீரில் சுக்கு துண்டுகளை இடித்து போட்டு கொதிக்க வைத்து பருகலாம்.இந்த சித்த வைத்தியங்களை பின்பற்றினால் தலைவலி,தலை பாரம்,ஒற்றைத் தலைவலி போன்ற பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

Previous articleமூட்டு பகுதியில் இந்த எண்ணையை தடவினால்.. வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!
Next articleலட்சங்களில் சம்பாதித்தாலும் பணக் கஷ்டம் மட்டும் தீர்ந்தபாடில்லையா? நீங்கள் செய்யும் இந்த தவறுகளே காரணம்!!