இரவு 12 மணிக்கு மேல் தான் தூக்கமே வருதா? அப்போ உங்கள் ஆயுள் சீக்கிரம் காலியாகிடுமாம் உஷார்!!

இளம் வயதினர் பலர் இரவு நேரங்களில் தூங்குவதே இல்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.தூக்கமின்மை பிரச்சனை என்பது தற்பொழுது தலைவிரித்து ஆடும் வியாதியாக உள்ளது.

இரவில் நல்ல தூக்கம் இல்லாமல் பகலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர் இந்த காலத்து பிள்ளைகள்.சரியான உணவு,உறக்கம் மனிதர்களுக்கு அவசியமான ஒன்றாக இருக்கும் பொழுது இதில் ஒன்றை தவிர்த்தாலும் நிச்சயம் பேராபத்து தங்களை வந்து சேரும்.

மென்பொருள் நிறுவன ஊழியர்கள் மற்றும் இரவு பணி பார்ப்பவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை அதிகமாக உள்ளது.சிலர் ஸ்லீப்பிங் டேப்லெட் போட்ட பிறகு தான் தூங்குகின்றனர்.

இரவு நேரத்தில் தாமதனாக தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்:

1)தாமத தூக்கம் உடல் இயக்கத்தை சீர்குலைக்கும்.இரவு நேரத்தில் தாமதமாக தூங்குவதால் அதிகப்படியான உடல் சோர்வு ஏற்படும்.

2)தூக்கமின்மையால் அன்றாட பணிகளை செய்வது கடிமனாகி விடும்.வேலை மற்றும் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துவிடும்.

3)இரவில் தாமதாக உறங்குவதால் உடலில் ஹார்மோன் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.இதனால் கருவுறுதலில் சிக்கல் ஏற்படும்.அதேபோல் தாமதமாக தூங்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும்.

4)தாமதமாக தூங்குவதால் உடல் எடை அதிகரிக்க கூடும்.அதேபோல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

5)தாமதமான தூக்கம் இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.தூக்கமின்மையால் கடும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.தொடர் தூக்கமின்மையால் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

6)தாமதமாக தூங்குவதால் உணவுபழக்க வழக்கங்களில் அக்கறை செலுத்த முடியாத நிலை ஏற்படும்.இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு பல வியாதிகள் உடலில் ஊடுருவ வழிவகை செய்துவிடும்.