உங்கள் வீட்டு பைப்பை ஓபன் செய்தால் சூடு தண்ணீர் ஊற்றுகிறதா? இதை கூலிங் செய்ய பெஸ்ட டிப்ஸ் இதோ!

Photo of author

By Divya

உங்கள் வீட்டு பைப்பை ஓபன் செய்தால் சூடு தண்ணீர் ஊற்றுகிறதா? இதை கூலிங் செய்ய பெஸ்ட டிப்ஸ் இதோ!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி 2 மாதங்கள் ஆகிறது.ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

கடுமையான வெயிலால் பகல் நேர பயணம் சிரமான ஒன்றாக இருக்கிறது. குழந்தைகள்,கர்ப்பிணிகள்,முதியவர்கள் உச்சி வெயிலில் வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி வருகிறது.

வெளியில் சென்றால் தான் வெயில் வாட்டி எடுக்கிறது என்று வீட்டில் அடைந்து கிடந்தால் அவை இன்னும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுகிறது.மதிய நேரத்தில் வீட்டிற்குள் அனல் காற்று வீசுகிறது.இதனால் FAN ஆன் செய்தால் அவை அதிக சூடான காற்றை கொடுக்கிறது.

சரி குளித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும் என்று வீட்டு பைப்பை ஓபன் செய்தால் கொதிக்க வைத்தது போல் சூடான நீர் வெளியேறுகிறது.இந்த நீரில் கைகளை கூட வைக்க முடியாது.பிறகு எப்படி குளிக்க முடியும் என்பது பலரின் புலம்பலாக இருக்கிறது.

எனவே வீட்டு பைப்பை திறந்தால் குளிர்ந்த தண்ணீர் ஊற்ற இந்த டிப்ஸ் தங்களுக்கு உதவும்.

டிப் 01:-

உங்கள் வீட்டு மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் டேங்க் சூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.முதலில் கோணி சாக்குகளை வைத்து ஒரு கவர் போல் தைத்து டேங்க்கை மூடவும்.பிறகு டேங்க்கை சுற்றி தார் பாலிங்களை போட்டு மூடி வைத்தால் டேங்க் மேல் சூரிய ஒளி படுவது தடுக்கப்படும்.இதனால் தண்ணீர் சூடாகாமல் இருக்கும்.

டிப் 02:-

நீர் நிரம்பி இருக்கும் தொட்டி,டேங்க்கை மூடி வைப்பதன் மூலம் தண்ணீர் சூடாவதை தடுக்க முடியும்.

டிப் 03:-

கருப்பு நிற டேங்க் சூரிய ஒளியை உள்வாங்கக் கூடியது.வெள்ளை நிறம் சூரிய ஒளியை உள்வாங்காது.எனவே வெள்ளை நிற தண்ணீர் டேங்குகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது.உங்கள் வீட்டு தண்ணீர் தொட்டிக்கு வெள்ளை நிற பெயிண்ட் அடிப்பதன் மூலம் தண்ணீர் சூடாவது தடுக்கப்படும்.

டிப் 04:-

முதலில் மண்ணை கொட்டி அதன் மேல் டேங்க் வைத்தால் அதில் நிரப்பி வைக்கும் தண்ணீர் குளிர்ந்த நிலையில் கிடைக்கும்.