உடல் வறட்சியை தடுக்கும் ORS கரைசல்! இதை நம் வீட்டிலேயே செய்து பருகலாம்!

0
100
ors-solution-to-prevent-body-dryness-lets-make-this-and-enjoy-it-at-home
ors-solution-to-prevent-body-dryness-lets-make-this-and-enjoy-it-at-home

உடல் வறட்சியை தடுக்கும் ORS கரைசல்! இதை நம் வீட்டிலேயே செய்து பருகலாம்!

கோடை காலத்தில் அதிகளவு நீர் அருந்துவது அவசியம்.கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலால் உடலில் இருக்கின்ற நீர் வியர்வையாக வெளியேறும்.வியர்த்தல் உடலுக்கு நல்லது என்றாலும் அவை அதிகப்படியான வெளியேறினால் உடல் வறட்சி ஏற்படும்.

இந்த அதிகப்படியான நீர் இழப்பால் உடல் அசதி,வயிற்றுப் போக்கு,மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.எனவே உடலில் நீர் ஏற்படாமல் இருக்க சில ஆரோக்கிய வழிமுறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம்.

உடலில் அதிகளவு வியர்வை வெளியேறினால் அவை தாது உப்பு இழப்பை ஏற்படுத்தும்.இதனால் உடலில் பல உபாதைகள் ஏற்படும்.இதை தடுக்க ORS கரைசல் அருந்துவது நல்லது.உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட ORS கரைசல் உடலுக்கு தேவையான சோடியம் மற்றும் பொட்டசியத்தை வழங்குகிறது.இதனால் தாது உப்பு இழப்பு பிரச்சனையை எளிதில் சரி செய்ய முடியும்.

ORS கரைசல் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.இதற்கு தேவைப்படும் பொருட்கள் தண்ணீர்,உப்பு மற்றும் சர்க்கரை ஆகும்.ஒரு லிட்டர் தண்ணீரில் 6 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 1/2 தேக்கரண்டி தூள் உப்பு சேர்த்து கலக்கினால் உடல் வறட்சியை போக்க கூடிய ORS கரைசல் தயார்.

இந்த ORS கரைசலை ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 1/2 லிட்டர் அளவு கொடுக்கலாம்.அதேபோல் 2 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் வரை ORS கரைசல் கொடுக்கலாம்.அதற்கு மேல் உள்ள வயதினருக்கு ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை ORS கரைசல் அருந்த கொடுக்கலாம்.