நம் அனைவருக்கும் சிறு வயதில் பால் பற்கள் விழுந்து புதிய பல் முளைக்கிறது.இது குழந்தை பருவத்தில் அனைவருக்கும் ஏற்பட கூடிய நிகழ்வு தான்.ஆனால் நாம் வளர்ந்த பிறகு பல் ஆட்டம் கண்டால் நமக்கு கலக்கத்தை உண்டாக்கிவிடும்.பற்கள் இருமுறை மட்டும் தான் முளைக்கும்.விழுந்து முளைத்த பல் மீண்டும் விழுந்தால் அவ்விடத்தில் புதிய பல் முளைக்காது.முளைத்த பல் ஆட்டம் காண பல காரணங்கள் இருக்கிறது.ஈறுகள் வலிமையை இழந்தால் பல் ஆட்டம் காணும்.
வயதான பிறகு பற்கள் ஆட்டம் காண்பது பொதுவான விஷயம் தான்.ஆனால் இளம் வயதில் பற்கள் ஆட்டம் கண்டால் அலட்சியம் கொள்ளாமல் உரிய தீர்வினை காண வேண்டும்.
பற்கள் வலுவிழக்க காரணங்கள்:
*ஈறு பிரச்சனை
*மோசமான வாய்வழி சுகாதாரம்
*பல் சிதைவு
*இனிப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுவது
தேவையான பொருட்கள்:-
1)பெரிய நெல்லிக்காய் – 10
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
பத்து பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரில் கால் தேக்கரண்டி பெரிய நெல்லிக்காய் பொடி சேர்த்து காலை மற்றும் இரவு நேரத்தில் வாய் கொப்பளித்து வந்தால் பல் வலிமை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பூண்டு பல் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
ஒரு வெள்ளைப்பூண்டு பல் எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு துண்டாக நறுக்கி ஆடும் பற்களின் இடையில் வைக்க வேண்டும்.இதை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் பல் ஆடுவது ஸ்டாப் ஆகிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)கடுகு எண்ணெய் – அரை தேக்கரண்டி
2)உப்பு – கால் தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
கிண்ணத்தில் அரை தேக்கரண்டி கடுகு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக குழைத்து ஆடும் பற்களை சுற்றி வைக்க வேண்டும்.இதை தினமும் செய்து வந்தால் பல் வலிமை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)கரு மிளகு – கால் தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
உரலில் கால் தேக்கரண்டி கரு மிளகு மற்றும் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை ஆட்டம் காணும் பற்களை சுற்றி தடவி வந்தால் பல் வலிமை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)ஹைட்ரஜன் பெராக்ஸைடு – 3%
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
வெறும் வாயில் 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஊற்றி வாய் கொப்பளிக்க வேண்டும்.பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் கொண்டு பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.இதை தினமும் காலை நேரத்தில் செய்து வந்தால் ஆடும் பற்களின் வலிமை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் எண்ணெய் அல்லது
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
தினமும் பல் துலக்கிய பிறகு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்து வந்தால் பற்களின் வலிமை அதிகரிக்கும்.