செல்போனை தலை பக்கத்தில் வைத்து தூங்குபவரா? அப்போ இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கே!!

Photo of author

By Divya

செல்போனை தலை பக்கத்தில் வைத்து தூங்குபவரா? அப்போ இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கே!!

Divya

இன்று எங்கு பார்த்தாலும் செல்போன் மையமாக இருந்து வருகிறது.காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை செல்போன் கையுமாகவே பலரும் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.இந்த தலைமுறையினர் சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள்.ஆனால் மொபைல் இல்லாமல் மட்டும் ஒரு நிமிடம் இருக்க மாட்டார்கள்.அந்தளவிற்கு மொபைலுக்கு அடிமையாகி கிடக்கின்றனர்.

சிலர் தூங்கும் போது மொபைலை அருகில் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.தலையணை அருகில் மொபைலை வைத்துவிட்டு உறங்குவதை 90% பேர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால் இது மிகவும் தவறான பழக்கம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.தூங்கும் போது மொபைலை அருகில் வைத்து தூங்குவது தவறான செயல்.

மொபைலில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.மொபைலில் இருந்து கதிர்வீச்சு நமது தூக்கத்தின் தரத்தை குறைத்துவிடும்.தூங்கும் பொழுது தொடர்ந்து செல்போனை அருகில் வைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் நிச்சயம் மூளை ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

மூளையில் கட்டிகள் உருவாக இந்த பழக்கம் காரணமாகிவிடும்.மொபைலில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகளுக்கு காரணமாகிவிடும்.எனவே இனி தூங்குவதற்கு முன் மொபைல் போனை தூரமாக வைத்துவிடுவது நல்லது.

தூங்கச் செல்வதற்கு முன்னர் மொபைல் போனை பிளைட் மோடில் போட்டால் போனில் இருந்து குறைவான அளவு மின் காந்த கதிர்வீச்சு வெளிப்படும்.தலைக்கு அருகில் மொபைல் போனை வைத்தால் நமக்கு தலைவலி,தலைபாரம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தலைக்கு பக்கத்தில் மொபைல் போன் வைத்தால் மூளை ஆரோக்கியம் மோசமாகிவிடும்.கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தலையணைக்கு அருகில் மொபைல் போன் வைத்து படுத்தால் கருவில் வளரும் குழந்தையின் மூளை சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.

அதேபோல் தூங்குவதற்கு முன்னர் உடையில் மொபைல் போன் வைப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் மொபைலில் இருக்கின்ற கதிர்வீச்சு தோலுக்கு எளிதில் ஊடுருவி புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்திவிடும்.