நரம்புகளில் சேதம் ஏற்படுவதால் வலி ஏற்படுகிறது.இந்த நரம்பு வலி யாருக்கு வேண்டுமானலும் வரக் கூடும்.வயது மற்றும் நோய் தாக்கத்தின் காரணமாக இந்த நரம்பு வலி அதிகரிக்கிறது.அதேபோல் சில மருந்துகளின் விளைவாக நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
நரம்பு வலி அதிகமாக இருந்தால் உடல் அசைவுகள் கடினமாகிவிடும்.நரம்பு வலி பாதிப்பை கவனிக்காமல் விட்டால் அவை கடும் பக்கவிளைவுகளுக்கு வழிவகுத்துவிடும்.இந்த நரம்பு வலிக்கான காரணங்களும் நரம்பு வலி வந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நரம்பு வலி காரணங்கள்:-
1)சர்க்கரை நோய்
2)பக்கவாதம்
3)வைட்டமின் பி12 குறைபாடு
4)நரம்பு மண்டல கோளாறு
5)மதுப்பழக்கம்
6)நரம்புகளில் அடிபடுதல்
7)நரம்புகளில் காயம் ஏற்படுதல்
நரம்பு வலி அறிகுறிகள்:-
1)ஊசி குத்தல் உணர்வு
2)அதிர்ச்சி போன்ற உணர்வு
3)அழுத்த உணர்வு
4)தூக்கமின்மை
5)கால் வலி
நரம்பு வலியால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்:
1)புற்றுநோய்
2)சர்க்கரை நோய்
3)ஸ்டோக்
நரம்பு வலியை குணப்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம்?
தேங்காய் எண்ணெய்,பாதாம் எண்ணெய் போன்றவற்றை சூடாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசினால் வலி குறையும்.
கடுகு எண்ணெய் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்யலாம்.நரம்புகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஹீட் பேக் மூலம் நரம்பு வலிகளை எளிதில் குணமாக்கி கொள்ளலாம்.வைட்டமின் பி சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் நரம்பு வலிமை அதிகரிக்கும்.எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
சுடுநீரில் காட்டன் துணி போட்டு பிழிந்து நரம்புகள் மீது அழுத்தம் கொடுத்தால் வலி சீக்கிரம் குணமாகும்.
நரம்பு வலி தீவிரமானால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.