உணவு செரிமானம் ஆகாமல் அவதியா.. இதோ பெருஞ்சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Rupa

நாம் அளவிற்கு அதிகமாக உண்ணும் பொழுது வயிறு உப்பசம் ஏற்படுகிறது.வயிற்றில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்குவதால் வயிறு உப்பச பிரச்சனை ஏற்படுகிறது.வயிறு உப்பசத்தால் வயிற்றுப்பகுதியின் தசை பகுதி வலிமையற்று காணப்படுகிறது.இந்த கல் போன்ற உணர்வை சரி செய்ய கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தலாம்.

தீர்வு ஒன்று

1)பெருஞ்சீரகம்
2)தண்ணீர்
3)தேன்

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தேநீர் போன்று கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

பிறகு சுவைக்காக ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகினால் வயிற்றில் உள்ள வாயுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.பெருஞ்சீரக டீ பருகுவதால் வாயுத் தொல்லை,செரிமானக் கோளாறு போன்ற அனைத்தும் குணமாகும்.

தீர்வு இரண்டு

1)எலுமிச்சை சாறு
2)வெள்ளரிக்காய் சாறு

கிண்ணம் ஒன்றில் எலுமிச்சை சாறை பிழிந்து விடவும்.பிறகு ஒரு வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து எலுமிச்சை சாறில் கலந்து பருகினால் வயிறு உப்பசம் சரியாகும்.

தீர்வு மூன்று

1)இஞ்சி துண்டு
2)தேன்
3)தண்ணீர்

பாத்திரம் ஒன்றில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு இடித்து சாறு எடுத்து சூடாகி கொண்டிருக்கும் நீரில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.

பிறகு இதை கிளாஸ் ஒன்றில் வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருகவும்.இந்த இஞ்சி பானம் வயிறு உப்பசத்தை குறைக்க உதவுகிறது.

வயிற்றில் தேங்கும் அதிகப்படியான வாயுக்களை வெளியேயற்ற இந்த இஞ்சி பானம் உதவுகிறது.