நெஞ்சு எரிச்சலினால் அவதிப்படுகின்றீர்களா? தினம் ஒரு செவ்வாழை!

Photo of author

By Parthipan K

நெஞ்சு எரிச்சலினால் அவதிப்படுகின்றீர்களா? தினம் ஒரு செவ்வாழை!

பொதுவாகவே தினம் தோறும் பால் மற்றும் வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு அதிக அளவு நன்மை உண்டாகும். அதிலும் குறிப்பாக செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றது

இந்த செவ்வாழை பழத்தில் பீட்டா கரோட்டின், விட்டமின் சி போன்றவைகள் அதிகளவு இருக்கின்றது. பீட்டா கரோட்டின் என்பது நம் உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. நம் உடலுக்கு சத்து நிறைந்த உணவையே நாம் எடுத்துக் கொள்வது மிக அவசியமான ஒன்றாக உள்ளது.

செவ்வாழையில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. அந்த சத்தானது நம் உடலில் கழிவுகள் வெளியேறாமல் தங்கி சிறுநீர் கற்கள் உருவாகின்றது அதனை உருவாகாமல் தடுக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.

வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிடுவதனால் நம் உடலில் கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறுகின்றது. எலும்புகள் நன்கு உறுதியாக இருக்க வேண்டும் என்றால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது அவசியம். செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் இதய நோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

மேலும் புற்றுநோய் ஏற்படுவதை இருந்தும் தடுக்கிறது. நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க வேண்டும் என்றால் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட வேண்டும். மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் ரத்த அணுக்களை சீராக பராமரிக்கவும் உதவுகின்றது.

நாம் தினமும் ஒரு செவ்வாழை எடுத்துக் கொள்வதன் மூலமாக நமக்கு தேவையான ஆற்றலை வழங்கி, உடலை புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது. இதில்லுள்ள சர்க்கரை அளவு உடலை சோர்வில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் நெஞ்சு எரிச்சலினால் அவதிப்பட்டு வருபவர்கள் தினம் ஒரு செவ்வாழை எடுத்துக் கொள்ள வேண்டும்.