கடுமையான பணிச்சுமை,மன அழுத்தம்,உரிய உறக்கத்தை அனுபவிக்காமை போன்ற காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.சிலர் அடிக்கடி ஒற்றைத் தலைவலி பாதிப்பால் அவதியடைகின்றனர்.
தலைவலி அனைவருக்கும் வரக் கூடிய ஒரு சாதாரண பாதிப்பு என்றாலும் அடிக்கடி இதை சந்திப்பவர்கள் மருத்துவரை அணுக வேண்டியது முக்கியம்.சாதராண தலைவலியை காட்டிலும் ஒற்றைத் தலைவலி குணமாக சில தினங்கள் எடுத்துக் கொள்ளும்.
பிடிக்காத ஒரு செயல் நடந்தாலோ,அல்லது டென்ஷன் ஆனாலோ இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும்.அதிகப்படியான தலைவலி,காய்ச்சல்,கவனக் குறைவு,சிறுநீர் கழிக்கும் எண்ணம் அதிகரித்தல் போன்றவை ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் ஆகும்.
உடல் சூடு அதிகரித்தல்,ஹார்மோன் மாற்றம் போன்ற காரணங்களாலும் ஒற்றைத் தலைவலி உண்டாகிறது.இந்த ஒற்றை தலைவலி பாதிப்பை இயற்கையான முறையில் குணப்படுத்தும் வழிகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
ஒற்றைத் தலைவலியை போக்கும் சுக்கு கசாயம்
தேவைப்படும் பொருட்கள்:
*சுக்கு – ஒரு பீஸ்
*தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:
ஒரு பீஸ் சுக்கை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
அதன் பிறகு இடித்த சுக்கு சேர்த்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி பருகினால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.
தேவைப்படும் பொருட்கள்:
*துளசி இலை – 10
*கற்பூரம் – 1
செய்முறை விளக்கம்:
உரலில் பத்து துளசி இலை மற்றும் ஒரு கற்பூரத்தை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை நெற்றி மீது பூசினால் ஒற்றைத் தலைவலி பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:
*கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
*சுக்கு – ஒரு பீஸ்
*சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை,ஒரு பீஸ் சுக்கு மற்றும் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் ஒற்றைத் தலைவலி நீங்கும்.