தினமும் நீங்கள் தலைக்கு குளிப்பவர்களா!! அப்போ இந்த பாதிப்புகள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும்!!

0
33

தினமும் நீங்கள் தலைக்கு குளிப்பவர்களா!! அப்போ இந்த பாதிப்புகள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும்!!

இந்த பதிவில் நாம் தினமும் தலைக்கு குளிப்பதால் தலைக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

நாம் நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் விட தலைக்கு அதிக கவனம் செலுத்தி வருவோம். அதாவது முடி உதிர்தல், பொடுகு, நரை முடி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடு பட நிறைய ஆயில்கள், ஹேர் கிரீம், மருந்து மாத்திரைகள் எல்லாம் நாம் பயன்படுத்துவோம்.

மேலும் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட தினமும் தலைக்கு குளிப்போம். தினமும் தலைக்கு குளிப்பதால் தலை முடி ஆரோக்கியமாக இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் தினமும் தலைக்கு குளிப்பதால் நம் தலைக்கும் தலை முடிக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அது என்னென்ன பிரச்சனைகள் என்று தற்பொழுது தெரிந்து கொள்வோம்.

தினமும் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்…

* நாம் தினமும் தலைக்கு குளிப்பதால் நம் தலையில் ஸ்கால்ப்புகளில் இயற்கையாக உள்ள எண்ணெய்கள் வறண்டு விடுகின்றது. இதனால் இளம் வயதில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

* தினமும் தலைக்கு குளிப்பதால் கூந்தலின் இயற்கை அழகு பாதிப்பு அடைகின்றது. மேலும் கூந்தலின் பளபளப்பும் சீர் குலைகின்றது.

* தினமும் தலைக்கு குளிப்பதால் தலைமுடி சிக்கு விழுந்து விடுகின்றது.

* நாம் தினமும் தலைக்கு குளிப்பதால் சில சமயங்களில் தலையில் புண்கள் கூட ஏற்படும்.

* நாம் தினமும் தலைக்கு குளிப்பதால் நம் தலையில் பொடுகு பிரச்சனை ஏற்படும்.

* தினமும் தலைக்கு குளிப்பதால் தலைமுடி பிரச்சனை அதிகமாகும். முன்பு உதிர்வதை விட தலைமுடி தற்பொழுது வேகமாக உதிரத் தொடங்கும்.

* தினமும் தலைக்கு குளிப்பதால் தலைமுடி வெடிப்பு அதிகரிக்கும்.

இதற்கான தீர்வு என்ன?

* தினமும் தலைக்கு குளிப்பதை நிறுத்திவிட்டு வாரத்திற்கு 2 அல்லது மூன்று முறை தலைக்கு குளிக்கலாம்.

* அவ்வாறு குளிக்கும் பொழுது தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம்.

* தலையை ஷாம்புவில் அலாசிய பின்னர் தலைக்கு கண்டிஷ்னர் மற்றும் ஷீரம் பயன்படுத்த வேண்டும்.