அடேங்கப்பா நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? 

0
337

அடேங்கப்பா நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

கோயில்களில் இறைவனைத் தரிசித்ததும் விபூதி பிரசாதம் வாங்கும் போது இடதுகையை கீழே வைத்து வலதுகையை மேலே வைத்து வாங்குவோம். விபூதியை இடதுகையால் இடக்கூடாது என்பது சாஸ்திரமாக கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது. திருநீறைப்பூசும் போது இறைவனது திருநாமத்தைச் சொல்லியபடி பூச வேண்டும். திருநீறை இடும்போது தெய்வ சிந்தனைகள் மட்டுமே மேலொங்கியிருக்க வேண்டும்.

திருநீற்றை உச்சியிலும் நெற்றியிலும் எப்போதும் வைக்க வேண்டும். ஒரு கையால் விபூதி பிரசாதம் வாங்கி மறுகையால் அதை இடுவதும் எஞ்சிய விபூதியை இறைவனை அலட்சியப்படுத்துவது போலாகும் என்கிறது சாஸ்திரங்கள். உலகில் எல்லோரும் இறுதிகாலத்தில் பிடி சாம்பலில் அடங்கிவிடுகிறார்கள். பேராசைக்கொள்ளும் வாழ்க்கை இறுதியில் சாம்பலில் முடிகிறது.

விபூதியை இரு புருவங்களுக்கு இடையில் வைக்கப்படும் போது மூளை நரம்புகள் தூண்டப்படுகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. அதிர்வுகளை உள் வாங்கும் சக்தி விபூதிக்கு உண்டு. சிறந்த கிருமி நாசினியாகவும், நெற்றியின் வியர்வையை உறிஞ்சும் தன்மையை உடையது விபூதி. இன்றும் கிராமங்களில் பிறந்த குழந்தைக்குத் தலைக்குக் குளிப்பாட்டியதும் உச்சந்தலையில் விபூதி வைப்பார்கள். தலையில் உள்ள ஈரத்தை விபூதியானது உறிஞ்சுக்கொள்ளும்.

எந்தவித ரசாயனமும் இல்லாமல் பசுவின் சாணத்தைக் கொண்டு இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் விபூதியில் பாதரச மூலக்கூறுகள் அதிகம் உண்டு. இவை நெற்றியில் வைப்பதால் நாம் சுவாசிக்கும் காற்று சுத்தப்படுத்தப்படுகிறது. நமது உடலில் ஏழு சக்கரங்கள் உண்டு. கண்ணுக்கு புலப்படாத இந்த சக்கரங்களை நாம் உணர மட்டுமே முடியும்.

இந்தச் சக்கரங்களின் சக்தியானது மேலும் உயரும் போது சக்தியானது அடுத்த சக்கரங்களுக்கு செல்கிறது. மோதிர விரலில் விபூதியைத் தொட்டு புருவ மத்தியிலும், தொண்டைக்குழியிலும், மார்பு கூட்டிலும் அணிந்தால் உள்வாங்கும் திறனும் அதிகரிக்கும்.

Previous articleஅம்மாடியோ.. கிரண் கிளப்பிய அதிர்ச்சி தகவல்? ஒன் டே நேரில் சந்திக்க ரூ.1.5 லட்சம்!! 25நிமிஷம் வீடியோ கால் பேச 30 ஆயிரம்!! வேற லெவல்!!
Next articleநாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here