உங்களுக்கு அடிக்கடி யூரின் வருதா? அப்போ இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

Photo of author

By Divya

உங்களுக்கு அடிக்கடி யூரின் வருதா? அப்போ இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

Divya

உடலில் குவியும் கழிவுகளை சிறுநீரகம் வழியாக வெளியேற்றி வருகின்றோம்.நாம் சிறுநீர் வெளியேற்றும் போது அதன்நிறம்,வாசனை மற்றும் அளவு ஆகியவற்றை அவசியம் கவனிக்க வேண்டும்.சிலருக்கு குறைவான அளவு சிறுநீர் வெளியேறும்.

தண்ணீர் பருகாமை,உடல் சூடு காரணங்களால் குறைவான அளவு சிறுநீர் வெளியேறும்.அதேபோல் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.குறிப்பாக இரவு நேரத்தில் அதிகளவு சிறுநீர் வெளியேறும்.அளவிற்கு அதிகமாக சிறுநீர் வெளியேறுகிறது என்றால் நிச்சயம் நீங்கள் அலட்சியம் எதுவும் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

டயாலிஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் பிரச்சனை இருக்கும்.அதேபோல் சிறுநீர்ப்பாதையில் தொற்றுகள் இருந்தால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணங்கள்:

1)மருந்து பக்க விளைவுகள்
2)சிறுநீர் பாதை தொற்று
3)நீரிழிவு நோய்
4)கர்ப்பம்
5)வயது முதுமை
6)சிறுநீர் கல்
7)ஈஸ்ட் தொற்று
8)பாக்டீரியா தொற்று
9)சிறுநீரக புற்றுநோய்
10)அதிக தண்ணீர் பருகுதல்

அடிக்கடி சிறுநீர் வருவதை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்:

**நெல்லிக்காய்
**சீரகம்
**தண்ணீர்

முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து நெல்லிக்காய் மற்றும் சீரகத்தை அதில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.இந்த பானத்தை வடிகட்டி பருகி வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படாமல் இருக்கும்.

**துளசி
**தண்ணீர்

ஒரு கைப்பிடி துளசியை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.இதனை அடுப்பில் வைத்து குறைந்த தீயில் அரை கப் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைத்து வடித்து பருகினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படாமல் இருக்கும்.