நாம் தினமும் சமையல் செய்ய பலவகை பாத்திரங்களை உபயோகப்படுத்துகிறோம்.குறிப்பாக அலுமியம்,நான் ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.முன்பெல்லாம் இரும்பு பாத்திரம் மண் பாத்திரங்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.ஆனால் தற்பொழுது எளிதில் சமையல் ஆகக் கூடிய மற்றும் அழகான பாத்திரங்கள் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டுமென்று கருதும் நாம் உணவு சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் ஆரோக்கியமானதா என்று தெரிந்து கொள்வதில்லை.தற்பொழுது நாம் பயன்படுத்தி வரும் பெரும்பாலான சமையல் பாத்திரங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கின்றது.
நாம் ஆரோக்கியமான உணவுகளை சமைத்தாலும் பாத்திரத்தின் தன்மையால் அவை விஷ உணவாக மாறிவிடுகிறது.இது பற்றிய விழிப்புணர்வு மக்கள் இடத்தில் இல்லாதது வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது.அலுமியம் பாத்திரம் இல்லாதே வீடே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.சாதம்,குழம்பு,பொரியல் போன்ற உணவுகளை தயாரிக்க பெரும்பாலும் அலுமினியம் பாத்திரங்களே பயன்படுத்தப்படுகிறது.பால் காய்ச்ச,டீ வைக்க என்று அலுமிய பாத்திர பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறவருகிறது.
அலுமினிய பாத்திரத்தில் சமைப்பதால் நேரம் மிச்சமாகும் என்றாலும் அவை உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை உண்டாக்கிவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.அலுமினிய பாத்திரத்தில் புளி,எலுமிச்சை சேர்த்த உணவுகளை சமைக்கும் பொழுது உணவு விஷமாக மாறுகிறது.இந்த உணவுகளை உட்கொண்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
அலுமினியத்திற்கு அடுத்து நான் ஸ்டிக் பாத்திரங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.இந்த பாத்திரத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புற்றுநோய் பாதிப்பு வரக் கூடும்.நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் மூளை கடுமையான சேதத்தை சந்திக்கும்.
சிலர் செராமிக்,எவர் சில்வர்,இரும்பு,செம்பு போன்ற பாத்திரங்களை பயன்படுத்துகின்றனர்.நான்ஸ்டிக்,அலுமினியம் போன்ற ஆபத்தான பாத்திரங்களை ஒப்பிடுகையில் இதுபோன்ற பாத்திரங்கள் குறைவான ஆபத்தையே வெளிப்படுத்தும்.உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் பாத்திரங்களை தவிர்த்துவிட்டு மண் பாத்திரம்,இரும்பு போன்ற நல்ல பாத்திரங்களை தேர்வு செய்து பயன்படுத்த தொடங்குங்கள்.