30 நிமிடங்களுக்கு மேல் மொபைல் போன் யூஸ் பண்ணுறீங்களா? இதனால் உடலில் இந்த பிரச்சனைகள் வரும்!!

Photo of author

By Divya

30 நிமிடங்களுக்கு மேல் மொபைல் போன் யூஸ் பண்ணுறீங்களா? இதனால் உடலில் இந்த பிரச்சனைகள் வரும்!!

Divya

இன்று இளம் வயதினர் முதல் வயதானவர் வரை அடிமையாகி இருக்கும் விஷயம் மொபைல் போன் பயன்பாடு.நேரத்திற்கு உணவு இல்லையென்றால் கூட கவலை படமாட்டர்கள்.ஆனால் கையில் எப்பொழுதும் மொபைல் போன் இருக்க வேண்டும் என்பது இக்காலத்து பிள்ளைகளின் பழக்கமாக இருக்கிறது.குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவதற்கு,அவர்களை ஒரே இடத்தில் அமர வைக்க பெற்றோர்கள் மொபைல் போனை கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் சிறு வயதிலேயே குழந்தைகள் உடலளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்தினால் உடலில் பல நோய்கள் உருவாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்:

1)ஞாபக மறதி
2)மூளைக்கட்டி
3)நரம்பு பிரச்சனை
4)கண்பார்வை குறைபாடு
5)புற்றுநோய்
6)கவனக் குறைபாடு
7)கழுத்து வலி
8)கை வலி

மொபைல் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் கையில் மொபைல் எடுத்தால் நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்கில் அதை பயன்படுத்துபவர்கள் ஏராளம்.தொடர்ந்து மொபைல் பயன்படுத்தினால் இதுபோன்ற ஆபத்துகள் வரும் என்று எச்சரித்தாலும் அதை பற்றிய விழிப்புணர்வு மக்களிடத்தில் குறைவாகவே இருக்கிறது.

நம் இந்தியாவில் நாளுக்கு நாள் செல்போன் விற்பனை அதிகரித்து வருகிறது.தற்பொழுது 75 கோடிக்கும் அதிகமானோர் செல்போன் பயன்படுத்துகின்றனர்.சிலரது வீட்டில் இரண்டு அல்லது மூன்றுக்கும் ம்,மேற்பட்ட ஸ்மார்ட் போன்கள் இருக்கிறது.

தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் நரம்பு சார்ந்த பிரச்சனையை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.செல்போனில் இருந்து வெளியேறும் கதிர்கள் நம் உடலை கடுமையாக பாதிக்கும்.அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் கழுத்து வலி மற்றும் கழுத்து பகுதியில் உள்ள எலும்பு தேய்மானமாக வாய்ப்பிருக்கிறது.கழுத்து வலியை தொடர்ந்து கை வலி வரும்.தொடர்ந்து செல்போன் பயன்படுத்தினால் தலைவலி,கண் எரிச்சல்,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.எனவே குறைவான நேரம் மட்டும் செல்போன் பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.