நீங்கள் ரெடிமேட் இட்லி மாவு யூஸ் பண்றிங்களா? இதன் பேராபத்து தெரிந்தால் இனி வாங்க மாட்டீங்க!!

Photo of author

By Divya

நீங்கள் ரெடிமேட் இட்லி மாவு யூஸ் பண்றிங்களா? இதன் பேராபத்து தெரிந்தால் இனி வாங்க மாட்டீங்க!!

Divya

நமது தமிழ்நாட்டில் இட்லி பேமஸான மற்றும் பாரம்பரிய உணவாக இருக்கிறது.உலகிலேயே அதிக ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உணவுகள் பட்டியலில் டாப் இடத்தில் இட்லி இருக்கிறது.அரிசி,உளுந்து சேர்த்த அரைக்கப்பட்ட மாவை இட்லி தட்டில் ஊற்றி நீராவியில் வேகவைத்து சாப்பிடுவதால் இவை உடலுக்கு நல்லதாக கருதப்படுகிறது.

காலை உணவு என்றாலே அது இட்லி தான்.இட்லி சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.உடலில் கொலஸ்ட்ரால் அளவும் ஏறாமல் இருக்கும்.டயட் இருபவர்கள் இட்லியை எடுத்துக் கொள்வது நல்லது.கடந்த காலங்களில் இட்லி ஆரோக்கிய உணவாக கருதப்பட்டது.ஆனால் தற்பொழுது இட்லி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்தான உணவுப் பொருளாக மாறிவிட்டது.

முன்பெல்லாம் அரிசி ஊறவைத்து வீட்டில் உள்ள ஆட்டுக்கால்,கிரைண்டரில் போட்டு அரைத்து இட்லி ஊற்றி சாப்பிட்டு கொண்டிருந்தோம்.ஆனால் இன்று நேரமின்மை காரணமாக கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இன்ஸ்டன்ட் அதாவது ரெடிமேட் இட்லி மாவை பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.

இதனால் நேரம் மிச்சமாகிறது என்று பலரும் வாங்கி பயன்படுத்துகின்றனர்.ஆனால் இந்த பாக்கெட் இட்லி மாவு உடல் ஆரோக்கியத்தை முழுமையாக சிதைக்க கூடியவையாக உள்ளது.நம்மை அறியாமலேயே நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு உண்டாக்கும் உணவை எடுத்து வருகிறோம்.பாக்கெட் மாவில் ஈகோலி எனும் பாக்டீரியா நிறைந்து இருக்கிறது.இது வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

பாக்கெட் இட்லி மாவால் ஏற்படும் தீமைகள்:

1.செரிமானப் பிரச்சனை
2.வயிற்று வலி
3.குடல் பாதிப்பு
4.வாந்தி
5.மயக்கம்
6.ஒவ்வாமை
7.உடல் வறட்சி
8.தலைசுற்றல்
9.இரைப்பை அலர்ஜி

இனி பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் இன்ஸ்டன்ட் இட்லி மாவை தவிர்த்துவிட்டு வீட்டில் தயாரித்த மாவை பயன்படுத்துங்கள்.