சானிடைசர் அதிகம் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்குத்தான் ஆபத்து!

Photo of author

By Kowsalya

நீங்கள் சானிடைசரைஅதிகமாக பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு தோல் பாதிப்புகள் வரும் அபாயம் இருக்கிறது என்று கூறுகின்றனர்.

 

கொரோனவின் இரண்டாவது அலையில் அனைவரும் சிக்கி பரிதவித்து கொண்டுதான் வருகிறோம். பல்வேறு வழிமுறைகளையும் அரசு அறிவித்து கொண்டு தான் உள்ளது. முக கவசம் அணியுங்கள், கையை சுத்தம் செய்யுங்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், என பல்வேறு வழிமுறைகளையும் அரசியல் மக்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறது.

 

கைகளை 20 நிமிடத்திற்கு ஒரு முறை கழுவ வேண்டும் என்பதால் அனைவரையும் சானிடைசர் பயன்படுத்தி கைகழுவ வலியுறுத்தி இருந்தோம். ஆனால் அதிகமாக சானிடைசர் பயன்படுத்தினால் அதில் உள்ள வேதிப் பொருட்களால் தோல் பாதிப்படையும் என்று கூறுகின்றனர்.

 

சானிடைசரிலுள்ள எத்தில் ஆல்கஹால், ஐசோபிரைல் மற்றும் ஆல்கஹால் ஆகிய வேதிப்பொருட்கள் வைரஸுக்கு எதிரான இரசாயன பொருட்கள். இதனை நாம் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் தொற்றுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அனைத்தையும் இது அழிக்கிறது. மேலும் தொற்று நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

 

ஆனால் நாம் அதிகமாக பயன்படுத்தினால் தோலில் ஈரப்பதம் நீங்கி வறட்சி ஏற்படும். வறட்சி ஏற்படும் பொழுது தோலில் அரிப்பு ஏற்படும். இதனால் தோலில் புண்கள் வர வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர். அதனால் தேவைக்கேற்ப மட்டும் சானிடைசர் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

 

உங்களுக்கு தோல் பாதிப்புகள் ஏற்கனவே இருந்தால் சானிடைசரை பயன்படுத்துவதை தவிர்த்து சோப்பு நீரை பயன்படுத்தலாம். சோப்பு நீரைக்கொண்டு கழுவும் போதும் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

 

சானிடைசரை பயன்படுத்தும் பொழுது தோல் பாதிப்புகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.