இயற்கையான பிங்க் நிற உதடுகள் உங்களுக்கு வேண்டுமா!!? இதோ அதற்கான எளிமையான டிப்ஸ்!!!
பல பெண்களுக்கும் இயற்கையாக பிங்க் நிறம் கொண்ட மற்றும் அதே நேரத்தில் மென்மையாக இருக்கும் உதடுகள் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்குண்டான சில எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிங்க் நிற உதடுகள் என்பது அழகிற்காக மட்டுமல்ல. இது நல்ல ஆரோக்கியத்தையும் குறிக்கின்றது. பெண்களில் முக்கால்வாசி பேர் கடைகளில் விற்பனை செய்யப்படும் உதடு பராமரிப்பு பொருட்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். இதை இயற்கையான வழிமுறையிலேம் பெறலாம் என்பது யாருக்கும் தெரிவதில்லை. இந்த பிங்க் நிறம் கொண்ட மென்மையான உதடுகளை பெறுவதற்கு இயற்கையான வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பிங்க் நிறம் கொண்ட உதட்டை பெறுவதற்கான டிப்ஸ்…
தண்ணீர்…
பிங்க் நிறம் கொண்ட உதடுகள் வேண்டும் என்றால் நம்முடைய உதடுகளில் போதுமான அளவு நீர்ச்சத்து இருக்க. வேண்டும். உதடு ஏன் கருமையாக மாறுகின்றது என்றால் உதடுகளில் தேவையான அளவு நீர்ச்சத்து இருக்காது. எனவே உதடுகள் நிறம் மாறுவதை தடுக்க அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக தண்ணீர் குடிப்பது உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
சர்க்கரை..
உதட்டை பிங்க் நிறமாக வைத்துக் கொள்ளை வேண்டும் என்றால் ஸ்கிரப் செய்ய வேண்டும். அதற்கு நாம் சர்க்கரையை பயன்படுத்தலாம். சர்க்கரையுடன் தேன் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து கொண்டு உதட்டில் தேய்த்து மெதுவாக ஒரு நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை நீங்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
லிப் பாம்…
லிப் பாம் பயன்படுத்துவதன். மூலமாக சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்பில் இருந்து நம்முடைய உதடுகளை பாதுகாத்துக் கொள்ளலாம். எஸ்.பி.எப் அடங்கிய லிப் பாம்களை உதடுக்கு பயன்படுத்த வேண்டும்.
இயற்கை முறையிலான எண்ணெய்கள்…
இயற்கை எண்ணெய்களான ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் இவற்றை பயன்படுத்தும் பொழுது உதடுகள் ஈரப்பதத்துடன் இருக்கும். இதனால் உதடுகள் மென்மையாகவும் பிங்க் நிறம் உடையதாகவும் இருக்கும். மேலும் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஊட்டம் அளிக்கின்றது.
பீட்ரூட் பாம்…
பீட்ரூட் பாம் எனப்படுவது பீட்ரூட் சாறை கொண்டு தயாரித்து பயன்படுத்தும் முறையாகும். அதாவது பீட்ரூட் சாறு எடுத்துக் கொண்டு அதில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து உதடுகளில் மீது தடவ வேண்டும். இதன் மூலம் உதடுகளுக்கு இயற்கையான முறையிலான பிங்க் நிறம் கிடைக்கும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு…
உதடு மென்மையாகவும் பிங்க் நிறத்திலும் வேண்டும் என்றால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள் வேண்டும். முக்கியமாக விட்டமின் பி, விட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்த உணவை நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ளை வேண்டும்.