வழக்கு உனக்கு சாதகமாக வேண்டுமா?? 10 ஆயிரம் கொடு!! மிரட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டரை பொறி வைத்து அமுக்கிய  லஞ்ச ஒழிப்புத்துறை!! 

0
92
Do you want the case in your favor?? Give 10 thousand!! Anti-bribery department caught the threatened female sub-inspector in a trap!!
Do you want the case in your favor?? Give 10 thousand!! Anti-bribery department caught the threatened female sub-inspector in a trap!!

வழக்கு உனக்கு சாதகமாக வேண்டுமா?? 10 ஆயிரம் கொடு!! மிரட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டரை பொறி வைத்து அமுக்கிய  லஞ்ச ஒழிப்புத்துறை!! 

மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் ரூ.3000 லஞ்சம் பெற்ற விபச்சார பிரிவு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டையத்தைச் சேர்ந்தவர் சரத்.இவருடைய மனைவி அஜிதா வயது 35. இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் கேரள ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார்.  இதில் விபச்சாரம் நடப்பதாக வந்த புகாரின் பேரில் திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். இதில் வழக்கை சாதகமாக முடித்து தரும்படி விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரிடம் கேட்டுள்ளார்.

அப்போது வழக்கை சாதகமாக முடிக்க 10 ஆயிரம் லஞ்சமாக விபச்சார தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரமா வயது 56, அஜிதாவிடம் கேட்டுள்ளார். வழக்கு காரணமாக சென்டரை நடத்த முடியாத சூழல் இருப்பதால் அவ்வளவு பணத்தை தர முடியாது என அஜிதா ரமாவிடம்  கூறினார்.

அதனால் சப்-இன்ஸ்பெக்டர் ரமா இப்போது முன்பணமாக ரூ.3000 கொடுத்தால் வழக்கை முடித்து தருகிறேன் என கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத அஜிதா, இதுபற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அவர்கள் கொடுத்த யோசனைப்படி அஜிதா நேற்று காலை 11 மணி அளவில் திருச்சி கண்டோன்மென்ட்  போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்துக்கு சென்று சப்-இன்ஸ்பெக்டர் ரமாவிடம்  ரசாயனம் தடவிய ரூ.3000 ஐ கொடுத்தார்.

அந்த பணத்தை வாங்கிய ரமா எண்ணிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரமாவை பிடித்து கைது செய்தனர். விபசார தடுப்பு பிரிவு அலுவலகத்திலும், சப்-இன்ஸ்பெக்டர் ரமாவின் வீடு மற்றும் அவருடைய இருசக்கர வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர். அதில் ரமாவின் ஸ்கூட்டரில் இருந்து 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.5லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இதைப்பற்றி விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து ரமாவை திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள நீதிமன்ற காவலில் பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த செய்தி அங்கு காட்டுதீ போல வேகமாக பரவியது.

Previous articleதமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!! 
Next articleஏலத்தில் விடப்பட்ட பழைய மாடல் “ஐபோன்”!! விலை 1.3 கோடி!!