நமது செரிமான மண்டல செயல்பாடு சீராக இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.செரிமான மண்டலம் ஆரோக்கியம் மோசமடைந்தால் அஜீரணக் கோளாறு,மலச்சிக்கல்,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
சிலருக்கு குறைவான அளவு உணவு சாப்பிட்டாலும் செரிமானப் பிரச்சனை ஏற்படுகிறது.இதற்கு உணவுமுறை பழக்கமே காரணமாக உள்ளது.சீக்கிரம் செரிமானமாகாத உணவுகளை தான் தற்பொழுது அனைவரும் ருசிக்கின்றனர்.மைதா,பதப்படுத்தப்பட்ட உணவுகள் செரிமானப் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
செரிமானம் சரியாக நடக்கவில்லை என்றால் குமட்டல்,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.தொடர்ந்து செரிமானப் பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு குடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்படும்.
அஜீர்ணக் கோளாறு பிரச்சனையை சரி செய்ய நாம் பின்பற்ற வேண்டிய 6 முக்கிய டிப்ஸ்:
1)நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.எளிதில் செரிக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
2)சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகுவதை தவிர்க்க வேண்டும்.உணவை குறைவான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.காலை உணவை பிரித்து சாப்பிட வேண்டும்.
3)எந்த உணவாக இருந்தாலும் மென்று சாப்பிட வேண்டும்.உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகினால் செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.
4)தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து வந்தால் செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
5)உரிய நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.சாப்பிட்ட உடன் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும்.
6)குடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை வெளியேற்ற டிடாக்ஸ் பானத்தை பருக வேண்டும்.செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும்.வாழைப்பழம்,பப்பாளி பழம்,ஆப்பிள் போன்றவை செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது.
எலுமிச்சை பானம்,சீரக பானம்,பெருங்காயம் சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் செரிமானம் எளிதாக நடக்கும்.