குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா… இந்த உணவை செய்து கொடுங்கள்…

0
101
Do you want to boost immunity in kids... Make this food...
Do you want to boost immunity in kids... Make this food...
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா… இந்த உணவை செய்து கொடுங்கள்…
நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறப்பான ஒரு உணவை தயார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் எளிமையாக சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் எளிதில் பிடிக்கும். அதை குணப்படுத்த மாத்திரைகள் வாங்கி கொடுப்போம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தனியாக மாத்திரை மற்றும் மருந்துகள் கொடுப்போம். அதற்கு மாற்றாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவை செய்து கொடுங்கள்.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஓட்ஸை வைத்து உணவு தயாரித்து கொடுக்கலாம். அந்த உணவின் பெயர் “ஓட்ஸ் மூங்க் தால்” டிக்கி ஆகும். இதை எவ்வாறு தயாரிக்கலாம் இதன் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்வோம்.
ஓட்ஸ் மூங்க் தால் டிக்கி உணவு செய்ய தேவையான பொருள்கள்…
* பாசி பருப்பு – முக்கால் கப்
* ஓட்ஸ் – முக்கால் கப்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் – 1 (துருவியது)
* தயிர்
* கரம் மசாலா
* மிளகாய் தூள்
* உப்பு
* எண்ணெய்
* மல்லித்தழை
* தண்ணீர்
செய்முறை
முதலில் பாசிபருப்பை ஊறவைத்து அதை வேகவைத்து பின்னர் அதை மசித்துக் கொள்ளவும். பின்னர் ஓட்ஸை ஒரு வாணலியில் போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்து அதை மிக்ஸியில் போட்டு கரடுமுரடாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் மசித்த பாசி பருப்பு, ஓட்ஸ், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு அதில் சிறிதளவு மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், மல்லித்தழை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் தயிர் சிறிதளவு சேர்த்து மென்மையான மாவாக வரும் வரை பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலி ஒன்றை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடான பிறகு இந்த மாவை வடை போல வட்டமாக பிடித்து அதை ஓட்ஸ் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஓட்ஸ் மூங்க் தால் டிக்கி தயாராகிவிட்டது. இதை அப்படியே குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஓட்ஸ் மூங்க் தால் டிக்கி உணவு மூலம் கிடைக்கும் நன்மைகள்…
* இந்த உணவு குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு ஆகும்.
* இதில் சேர்க்கப்பட்டிருக்கும் ஓட்ஸ் மற்றும் பாசிப் பருப்பில் மூலமாக ஒமேகா-3 சத்துக்கள், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்துக்கள் குழந்தைகளுக்கு கிடைக்கின்றது.
* ஓட்ஸில் கொலஸ்ட்ரால் அதாவது கெட்ட கொழுப்புகளை கரைக்கும் பண்பு இருப்பதால் உடல் எடையும் குறையும்.
* இதில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் சத்து புற்றுநோய் வருவதை தடுக்கின்றது.
* இந்த உணவானது மற்ற உணவுகளைப் போல அல்ல. குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாகும். மேலும் இதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
Previous articleஉங்கள் தலையில் பொடுகு அதிகமாக இருக்கா… பொடுகுத் தொல்லை போக இந்த இரண்டு பொருள்கள் போதும்…
Next articleஇளைஞர்களே இதோ உங்களுக்கான சூப்பர் நியூஸ்!! மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!!