மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து மீள பிரண்டை,ஓமம்,மிளகு உள்ளிட்ட பொருட்களை வைத்து வடகம் தயாரித்து உட்கொள்ளலாம்.நார்ச்சத்து நிறைந்த இந்த பிரண்டை வடகம் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற உதவுகிறது.
தேவைப்படும் பொருட்கள்:-
1)பிரண்டை – ஒரு கைப்பிடி
2)ஓமம் – ஒரு தேக்கரண்டி
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)அதிமதுரம் – சிறிதளவு
5)கரு மிளகு – கால் தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கைப்பிடி பிரண்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு இதனை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஓமம்,சீரகம்,அதிமதுரம் மற்றும் மிளகு ஆகியவற்றை வாணலியில் கொட்டி லேசாக வறுக்க வேண்டும்.
அதன் பிறகு மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கலவையை பிரண்டை பேஸ்ட்டில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.
இந்த கலவையை ஒரு காட்டன் துணியில் சிறு சிறு உருண்டைகளாக வைத்து வெயிலில் ஒரு வாரத்திற்கு காய வைக்க வேண்டும்.பிரண்டை வடகம் நன்றாக காய்ந்து வந்த பிறகு ஒரு ஈரம் இல்லாத டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளா வேண்டும்.
இந்த வடகத்தை பொரித்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.பிரண்டை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவுப் பொருள்.அதேபோல் ஓமம்,மிளகு,அதிமதுரம் போன்றவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இவை அனைத்தையும் கொண்டு வடகம் தயாரித்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
பிரண்டையில் சூப் செய்து பருகலாம்.பிரண்டை சட்னி,பிரண்டை தொக்கு,பிரண்டையை மாத்திரையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.