செய்கூலி சேதாரம் இல்லாமல் குறைந்த விலைக்கு தங்கம் வாங்க ஆசையா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

0
313
#image_title

செய்கூலி சேதாரம் இல்லாமல் குறைந்த விலைக்கு தங்கம் வாங்க ஆசையா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

தங்க முதலீட்டாளர்களை கவரும் வகையில் 2015 இல் “தங்கப் பத்திரம்” என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த தங்கப் பத்திரம் திட்டத்தின் மூலம் தங்கத்தை பத்திர வடிவில் பெற்றுக் கொள்ள முடியும்.

இம்முறை தங்கப் பத்திரத்தின் விலை கிராமிற்கு ரூ.6271 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் செய்கூலி சேதாரம் இன்றி தங்கம் வாங்க முடியும் என்பது தான். அதுமட்டும் இன்றி தங்கதின் மதிப்பு கூடினால் நீங்கள் வாங்கும் பத்திரத்தின் மதிப்பும் கூடும். இந்த பத்திரத்தை பெற்றுக் கொள்ள ஜிஎஸ்டி ஏதும் கிடையாது.

இந்த திட்டத்தின் மூலம் தங்கப் பத்திரம் வாங்குபவர்களுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி கொடுக்கப்படுகிறது. இவை பாதுகாப்பான முதலீடாக இருப்பதினால் மக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்வது நல்ல லாபம் பார்க்க முடியும்.

தங்கப் பத்திரத்தின் விலை மற்றும் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றி வருகிறது. தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு இருமுறை வட்டி தொகை பெற்றுக் கொள்ள முடியும்.

தபால் நிலையங்கள் மூலம் தங்கப் பத்திரம் வாங்கிக் கொள்ளலாம். கடந்த 12 ஆம் தேதி தொடங்கப்பட்ட தங்கப் பத்திர விற்பனை இன்று மாலையுடன் முடிவடைய உள்ளது. மீண்டும் ரிசர்வ் வங்கி அறிவிக்கும் பொழுது தான் தங்கப் பத்திரம் வாங்க முடியும்.

தங்கப் பத்திரம் வாங்குவதற்கு தேவைப்படும் ஆவணங்கள்:

*ஆதார் கார்டு
*பான் கார்டு
*ஓட்டர் ஐடி
*வங்கி கணக்கு எண்

அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று தங்கப் பத்திரம் பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தேவையான ஆவணங்கள் மற்றும் தொகையை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

Previous article13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை!
Next articleமீண்டும் அதிரடி காட்டும் தங்கத்தின் விலை!! இன்று சவரனுக்கு எவ்வளவு உயர்வு!!