Breaking News

ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?? அரசு கிளை அச்சகத்தில்   வெளிவந்துள்ள  புதிய முறை!!

New method to change name in Salem Government Branch Press!! Application Fee Rs 415!!

ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?? அரசு கிளை அச்சகத்தில்   வெளிவந்துள்ள  புதிய முறை!!

சேலத்தில் உள்ள அரசு கிளை அச்சகத்தில் பொதுமக்களின் பெயர்  ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய ரூ.415 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

சேலத்தில் அரசு கிளை அச்சகத்தில் பொதுமக்களின் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. பொதுமக்கள் தங்களது பெயரை ஆகிலத்தில் மாற்ற வேண்டும் என்றால் விண்ணப்ப கட்டணமாக ரூ.350 ம் மற்றும் அஞ்சல் கட்டணமாக ரூ.65 ம்  என்று மொத்தமாக ரூ.415  செலுத்த வேண்டும்.

அதுவே தமிழில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் விண்ணப்ப கட்டணம் ரூ.50 ம் மற்றும் அஞ்சல் கட்டணமாக ரூ.65 ம்  என்று மொத்தமாக ரூ.115 ம் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணத்தை இந்திய வங்கியின் ஏதேனும் ஒரு வங்கியில் இ- செலான் மூலம் செலுத்த வேண்டும். இதில் பெயர் மாற்றம் செய்ய பிறப்பு சான்றுதல் , கல்லுரி சான்றுதல் ,ஆதார் அட்டை , வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டு போன்றை கட்டாயம் இணைக்க வேண்டும்.

பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள  www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  மேலும் விண்ணப்பங்களை சேலம் அரசு கிளை அச்சகம், 5 ரோடு ,சேலம் -4  என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.