கோடை காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.உடல் குளிர்ச்சியாக இருந்தால்தான் நாள் முழுவதும் புத்துணரவுடன் செய்லபட முடியும்.உட்கொள்ளும் உணவுகள் மூலமே உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.
உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்:-
1)தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.வெள்ளரி,முலாம் பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
2)வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும் எலுமிச்சை,திராட்சை,ஆரஞ்சு போன்றவை உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
3)இளநீர்,நுங்கு போன்றவை உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.தயிர்,மோர் போன்றவற்றை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
4)தக்காளி,கத்தரிக்காய் போன்றவற்றை உணவாக சாப்பிட்டால் உடல் சூடாகாமல் இருக்கும்.வெந்தயம்,குடைமிளகாய் போன்றவற்றை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் மோர் பருக வேண்டும்.
5)கற்றாழை ஜூஸ் செய்து குடித்தால் உடல் சூடு தணியும்.புடலங்காய்,சுரைக்காய்,பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்களை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.நன்னாரி வேரை ஊறவைத்து குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.
ஆனால் காபி,டீ போன்ற சூடான பானங்களை தவிர்க்க வேண்டும்.எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.கோழி இறைச்சி அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.சூடான நீர் பருகுவதை தவிர்க்க வேண்டும்.