ஒரே வாரத்தில் உங்களின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா! இதனை மட்டும் நீங்கள் எடுத்துக் கொண்டால் போதும்!

0
275

ஒரே வாரத்தில் உங்களின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா! இதனை மட்டும் நீங்கள் எடுத்துக் கொண்டால் போதும்!

இயற்கையான முறையில் இரண்டு வாரத்தில் உடல் எடையை அதிகரிக்கும் முறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.

தற்போதுள்ள சூழலில் அன்றாடம் வேலைகளை நோக்கி செல்வதன் காரணமாக நாம் உடல் எடையை சரியாக கவனித்துக் கொள்வதில்லை. இதனால் உடல் எடை குறைகிறது. அதனை இரண்டு வாரத்தில் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகளை தற்போது காணலாம்.

உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் பொருட்களில் மிக முக்கியமானது மற்றும் இன்றியமையாததாகவும் தயிர் உள்ளது. நாம் உணவு உட்கொண்ட பிறகு இறுதியாக தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் முன்னோர்கள் கூறுவார்கள். நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை மிக விரைவாக செரிக்கும் தன்மை தயிருக்கு உள்ளது.

தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது மற்றும் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது. பாலில் உள்ள புரோட்டீன்ஸ்களை விட தயிரில் அதிக புரோட்டின் உள்ளது. தயிரில் கால்சியம், வைட்டமின் டி, சி அதிக அளவில் உள்ளது. பொதுவாக நம் உடலில் ஹார்மோன்ஸ்கள் குறைபாட்டால் உடல் எடை குறைகிறது. ஹார்மோன் சுரப்பிகளை சீராக வைத்திருக்க தயிர் மிகவும் உகந்த பொருளாகும்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் நாட்டு சக்கரையை எடுத்துக் கொள்ளும் பொழுது செரிமான சக்தியை அதிகரிக்க செய்கிறது. பொதுவாக பாதாம் முந்திரி ஆகியவற்றில் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் தன்மை அதிகமாக கொண்டுள்ளது.

200 எம்எல் தயிர் மற்றும் 2 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை ஐந்து முந்திரிப் பருப்பு, ஐந்து பாதாம் பருப்பு ஆகியவற்றை நன்றாக அரைத்து இதனை காலை எடுத்துக் கொள்ளலாம் மற்றும் இரவு உறங்குவதற்கு முன் எடுத்துக் கொள்ளலாம் இவ்வாறு சாப்பிடுவதன் மூலமாக உடல் எடை அதிகரிக்கச் செய்யும்.

Previous articleமிதுனம் ராசி- இன்றைய ராசிபலன்! கவனமாக இருக்க வேண்டிய நாள்!
Next articleசிம்மம் ராசி- இன்றைய ராசிபலன்!குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!