தொண்டை கரகரப்பு உடனடியாக சரியாக வேண்டுமா.. மிளகு மற்றும் இஞ்சியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்கள்!!

Photo of author

By Rupa

தொண்டை கரகரப்பு உடனடியாக சரியாக வேண்டுமா.. மிளகு மற்றும் இஞ்சியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்கள்!!

வைரஸ்,பாக்டீரியா தொற்றுகளால் தொண்டையில் புண்,கரகரப்பு,தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.இதனால் தண்ணீர் அருந்தும் போதும்,எச்சில் விழுங்கும் போதும் தொண்டை பகுதியில் வலி,எரிச்சல் உண்டாகிறது.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து 3 நாட்களுக்கு முயற்சித்து வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு
2)மிளகு – நான்கு
3)மஞ்சள் பொடி – சிட்டிகை அளவு
4)தூதுவளை இலை – பத்து

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஒரு துண்டு இஞ்சி மற்றும் நான்கு மிளகை போட்டு கொரகொரப்பாக இடித்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு பத்து தூதுவளை இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இப்பொழுது இடித்த இஞ்சி மற்றும் மிளகு விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.அதன் பின்னர் நறுக்கிய தூதுவளை இலையை சேர்த்து குறைவான தீயில் கொதிக்க விடவும்.

கசாயம் நன்கு கொதித்து வந்ததும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு இதை நன்கு ஆறவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் தொண்டை வலி,தொண்டை கரகரப்பு,தொண்டைப்புண் பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர்
2)சோடா உப்பு
3)தூள் உப்பு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் இந்த நீரை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிதளவு உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து வாயை கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண்,தொண்டை வலி,தொண்டை கரகரப்பு குணமாகும்.