நமது நரம்பு வலிமை அதிகரிக்க ஊட்டச்சத்து உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.ஆனால் நாம் இன்று எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இருந்து சரிவிகித ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை.இதனால் நரம்பு புடைப்பு,நரம்பு வீக்கம்,நரம்பு சுருட்டல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
வெறும் பசி மற்றும் ருசிக்காக உட்கொள்ளாமல் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு உரிய ஊட்டச்சத்து உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நரம்புகளை வலிமைப்படுத்தும் உணவுகள்:
1)கோழி ஈரல்
இதில் வைட்டமின் பி 12 சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.கோழி ஈரலை உணவாக சாப்பிட்டு வந்தால் நரம்புகளின் வலிமை அதிகரிக்கும்.
2)பொன்னாங்கண்ணி கீரை
வாரம் இருமுறை பொன்னாங்கண்ணி கீரை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலிமை அதிகரிக்கும்.நரம்பு வலுப்பெற முருங்கை கீரை சாப்பிடலாம்.
3)இலவங்கப்பட்டை
தினமும் ஒரு கிளாஸ் இலவங்கப்பட்டை தேநீர் செய்து குடித்து வந்தால் நரம்புகளின் வலிமை அதிகரிக்கும்.
4)ஓரிதழ் தாமரை
தினமும் காலையில் எழுந்ததும் ஒரு தேக்கரண்டி ஓரிதழ் தாமரை விதை பொடி சாப்பிட்டால் நரம்புகளின் வலிமை அதிகரிக்கும்.
5)பூனைக்காலி பொடி
இந்த மூலிகையை பொடித்து சாப்பிட்டு வந்தால் நரம்பு சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.நரம்பு வலிமை அதிகரிக்க இந்த ஒரு பொடியை பாலில் கலந்து குடிக்கலாம்.
6)இஞ்சி
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துண்டு இஞ்சியை இடித்து சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் நரம்புகளின் வலிமை அதிகரிக்கும்.
7)ஒமேகா 3 கொழுப்பு உணவுகள்
தினமும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த ஏதேனும் ஒரு உணவுகளை சாப்பிடலாம்.சியா,பாதாம்,மீன்,வால்நட்,அவகேடோ போன்ற பொருட்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படுகிறது.