60 வயதிலும் 20 வயதை போல இருக்க வேண்டுமா… அப்போ இந்த பொருட்களை சாப்பிடுங்க!!

0
292
#image_title

60 வயதிலும் 20 வயதை போல இருக்க வேண்டுமா… அப்போ இந்த பொருட்களை சாப்பிடுங்க!!

மாறி வரும் இந்த காலகட்டத்தில் 60 வயது உள்ள பெரியவர்கள் அனைவருக்கும் எதாவது வகையில் உடல் சோர்வுடனும் சோம்பலுடனும் இருக்கும். இதையெல்லாம் சரி செய்து 20 வயது இளைஞர் போல 60 வயதிலும் இருக்க வேண்டும் என்றால் இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும். 80 வயதிலும் எந்த ஒரு நோயும் இல்லாமல் இருக்கலாம். அது என்னென்ன பொருட்கள் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

* முதலில் நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு அந்த பாத்திரத்தில் பாதம் பருப்புகள் அனைத்தும் முழுகும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு இதில் அரை டிஸ்பூன் கசகசா சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு டிஸ்பூன் வெந்தயத்தை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இதில் ஒரு டிஸ்பூன் கொண்டைக் கடலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இதில் எட்டு கிஸ்மிஸ் அதாவது உலர் திராட்சையை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் சேர்த்து இந்த பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி வைக்க வேண்டும். ஒரு நாள் முன்பு இரவே இவை அனைத்தையும் ஊற வைத்து பிறகு மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அப்படியே சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் எந்தவிதமான நோய்களும் நமக்கு வராது.

பாதாம் பருப்பில் உள்ள பயன்கள்…

பாதம் பருப்பில் விட்டமின் ஈ, கலோரி, நல்ல கொழுப்புகள், சோடியம், கார்போ ஹைட்ரேட், ஒமேகா3 பேட்டியாசிட், பைபர், புரோட்டீன், மாங்கனீசு, மொக்னீசியம், விட்டமின் பி2, ரிபோ ப்ளோவின் போன்ற பல சத்துக்கள் உள்ளது. இதில் இருக்கும் பைடு நியூட்ரியன்ட்ஸ் இதய நோய் வராமல் தடுக்கும். இதயத்திற்கு தேவையான இரத்தத்தை வழங்குகின்றது. மேலும் இதயத்திற்கு போகக்கூடிய இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. தினமும் 4 பாதம் பருப்பை சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறி விடும். பாதாம் பருப்பில் கிளைசெமிக் குறியீடு குறைவான அளவில் இருக்கின்றது. தினமும் நான்கு பாதாம் பருப்புகளை சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. மூட்டு வலியால் அவதிப்படுபவர்களும் பாதாம் பருப்பை எடுத்துக் கொள்ளலாம். பாதாம் பருப்பில் இருக்கும் அதிக கால்சியம் சத்துக்கள் நம் எலும்புகளையும், மூட்டுகளையும் பலப்படுத்தும். பாதாம் பருப்பை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டும். குறிப்பாக ஊற வைத்த பாதாம் பருப்பில் ஃபோலிக் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் நரம்பு மண்டலங்களின் வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றது. பாதாம் பருப்பில் விட்டமின் ஈ சத்து இருக்கின்றது. இதனால் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கம் சரிசெய்யப்படுகிறது. பாதாம் பருப்பில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் நமக்கு ஏற்படும் செரிமான கோளாறை சரி செய்கின்றது. பாதாம் பருப்பில் உள்ள இரும்புச்சத்துக்கள் நம் உடலில் இரத்தக் குறைபாட்டை நீக்கி உடலுக்கு தேவையான இரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றது. அது மட்டுமில்லாமல் இரத்த சோகை பிரச்சனையையும் சரி செய்கின்றது.

கசகசாவில் உள்ள பயன்கள்:

கசகசாவிலும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகள், பொட்டாசியம், இரும்புச் சத்து, கலோரிகள், சோடியம், மெக்னீசியம், காப்பர் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளது. கசகசாவில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளை பலப்படுத்துகின்றது. இதனால் நமக்கு மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகு வலி போன்ற எந்த விதமான வலிகளும் ஏற்படாது. கசாகசாவை நாம் சாப்பிடும் பொழுது இது செரிமாண மண்டலத்தை சரியாக வேலை செய்ய வைக்கின்றது. இதனால் வாயுத் தொல்லை, அஜீரணம், வயிறு உப்புசம், வயிறு வலி போன்ற எந்த ஒரு பிரச்சனையும் நமக்கு ஏற்படாது. கசகசாவில் டயட்ரி பைபர் சத்துக்கள் உள்ளதால் நமக்கு இதயம் தொடர்பான எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது. இதயத்தில் ஏற்படும் அடைப்பையும் கசகசா சரிசெய்கின்றது. இந்த கசகசாவில் ஒலியிக் ஆசிட் இருப்பதால் நமக்கு இருக்கும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் நீங்கள் கசகசாவை சாப்பிடலாம். இதனால் சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் உடைந்தோ அல்லது கரைந்தோ சிறுநீர் வழியாக வெளியேறுகின்றது. கசகசாவை எடுத்துக் கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.கசகசாவில் இருக்கும் ஜிங் சத்துக்கள் தைராய்டு சுரப்பியை சிறப்பாக செயல்பட வைக்கின்றது. தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்களாக நீங்கள் இருந்தால் கசகசாவை எடுத்துக் கொண்டால் நல்ல தூக்கம் வரும். வயிற்று புண், வாய்ப்புண் இரண்டையும் குணப்படுத்தும் சக்தி கசகசாவில் உள்ளது. ஆண்மைக் குறைபாடு உள்ள ஆண்கள் கசகசாவை எடுத்துக் கொள்வதால் விந்தணு எண்ணிக்கை அதிகமாகின்றது.

வெந்தயத்தில் உள்ள பயன்கள்

வெந்தயத்தில் குளிர்ச்சித் தன்மை அதிகம் உள்ளது. இதனால் வெந்தயத்தை எடுத்துக் கொண்டால் உடல் சூடு தணிக்கப்படுகின்றது. வெந்தயத்தில் சோடியம், கலோரிகள், பொட்டாசியம், கார்போ ஹைட்ரேட், பைபர், புரோட்டீன், விட்டமின் சி, இரும்புச் சத்து, விட்டமின் பி6, மெக்னீசியம், கால்சியம், ஜிங் போன்ற உடலுக்கு தேவையான பலவிதமான சத்துக்கள் உள்ளது. தினமும் ஒரு டிஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறுகின்றது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு டிஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் நீராழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. வெந்தயத்தில் கேன்சரை குணப்படுத்தும் சத்துக்கள் உள்ளது. இதனால் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுக்கவும் எதிர்காலத்தில் கேன்சர் நோய் வரவிடாமல் தடுக்கவும் வேண்டுமென்றால் தினமும் ஒரு டிஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும். ஆண்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் டெஸ்ட்ரோடோன் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இதனால் ஆண்மை குறைபாடு பிரச்சனை இருக்காது. உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு டிஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து தாராளமாக சாப்பிடலாம். வெந்தயத்தில் இருக்கும் அதிக அளவு கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் எலும்புகளையும், மூட்டுகளையும் பலப்படுத்துகின்றது. எலும்பு தேய்மானத்தை தடுக்க நீங்கள் வெந்தயத்தை தாராளமாக சாப்பிடலாம். வெந்தயம் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்கும். வெந்தயத்தில் விட்டமின் ஈ சத்து இருப்பதால் வெந்தயத்தை சாப்பிடும் பொழுது முடி வளர்ச்சி அடையும். வெந்தயத்தை சாப்பிடுவதால் எப்பொழுதும் முகத்தை இளமையாக வைத்திருக்கலாம்.

கொண்டைக் கடலையில் உள்ள பயன்கள்…

கொண்டைக் கடலையில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால் வகை 2 நீரிழிவு நோயாளிகள் கொண்டைக் கடலையை தண்ணீரில் போட்டு ஊறவைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. கொண்டைக் கடலையில் கால்சியம் சத்துக்கள் அதிக அளவு இருப்பதால் எலும்பு சம்பந்தமான எந்த ஒரு குறைபாடும் வராது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை சாப்பிட வேண்டும். கொண்டைக் கடலையை சாப்பிடும் பொழுது உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் கொண்டைக் கடலையை சாப்பிடும் பொழுது இதயம் சம்பந்தமான எந்த ஒரு குறைபாடும் ஏற்படாது. இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டமும் சீராக கிடைக்கும். கொண்டை கடலையை சாப்பிடுவதால் உடலில் கேன்சர் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படுகறது. கேன்சர் நோய் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது. கொண்டைக் கடலையை ஊற வைத்து சாப்பிடுவதால் உடலில் இருக்கும் அனைத்து கெட்ட கொழுப்புகளும் கரைக்கப்படுகிறது. இதனால் உடல் எடையும் குறைக்கப்படுகிறது. அஜீரணக் கோளாறு இருந்தால் அதை சரி செய்யவும் கொண்டைக் கடலையை நாம் சாப்பிடலாம். கொண்டைக் கடலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் இது ஹீமோ குளோபின் அளவை அதிகரிக்கின்றது. ஹீமோ குளோபின் அளவு அதிகரிக்கும் பொழுது இரத்தக் குறைபாடு என்பது நமக்கு வரவே வராது.

உலர் திராட்சையில் உள்ள பயன்கள்…

கிஸ்மிஸ் எனப்படும் உலர் திராட்சையில் கலோரிகள், பொட்டாசியம், கார்போ ஹைட்ரேட், பைபர் சத்து, புரோட்டீன், விட்டமின் சி, விட்டமின் பி6, இரும்புச்சத்து, மெக்னீசயம், கால்சியம் போன்று பலவிதமான சத்துக்கள் உள்ளது. எட்டு உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் அதனுடைய பலன்கள் நமக்கு இரட்டை மடங்காகக் கிடைக்கின்றது. இந்த உலர் திராட்சையில் உள்ள சத்துக்கள் நமது செரிமான மண்டலத்தை சிறப்பாக செயல்பட உதவுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் அனைவரும் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனை சரியாகும். உலர் திராட்சையில் உள்ள ஊட்டச் சத்துக்கள் நம் முகத்திற்கு தேவையான சத்துக்களாகும். நம்மை என்றும் இளமையாக வைத்திருக்கவும் இது உதவுகின்றது. நம் உடலில் சீராக இரத்தத்தை தரக்கூடியது இந்த உலர் திராட்சை. இதனால் எந்தவித நோயும் நம் உடலுக்கு வராது. உலர் திராட்சையை சாப்பிடும் பொழுது ஹீமோ குளோபின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் இரத்த சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் குறைபாடுகள் வராது. இதனால் உடலுக்கு தேவையான இரத்தம் உற்பத்தியாகின்றது. இதில் கால்சியம், இரும்புச் சத்துகள் அதிக அளவில் இருப்பதால் எலும்பு சம்பந்தமான நோய்கள் எதுவும் வராது. உலர் திராட்சையில் விட்டமின் சி உள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி நம் உடலில் அதிகரிக்கின்றது. உலர் திராட்சையில் இயற்கை சர்க்கரை உள்ளது. இதனால் உலர் திராட்சையை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் உலர் திராட்சையை சாப்பிட்டால் சர்க்கரை அதிகமாகும் என்று பயப்பட தேவையில்லை. உலர் திராட்சை நம் உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது. உலர் திராட்சையை சாப்பிடும் பொழுது கண் பார்வை குறைபாடு நீங்குகின்றது.

Previous article100 வயது வரை வாழ வேண்டுமா??  அப்போ இந்த விதையை மட்டும் சாப்பிடுங்கள் போதும்!! 
Next articleநுரையீரல் அலர்ஜியால் பிரச்சனையா?? ஒரு நாளில் சரி செய்ய ஆயுர்வேத மருந்து இதோ!!