60 வயதிலும் 20 வயதுள்ளவர்கள் போல இருக்க வேண்டுமா! இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்!!

0
126

60 வயதிலும் 20 வயதுள்ளவர்கள் போல இருக்க வேண்டுமா! இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்!!

 

60 வயதிலும் எந்தவொரு நோய்நொடியும் இல்லாமல் 20 வயது உள்ளவர்கள் போல வாழ வேண்டும் என்று ஆசைபடுபவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். இந்த மருந்தை வீட்டில் இருக்கும் இரண்டே பொருளை வைத்து தயார் செய்யலாம்.

 

இந்த மருந்தை சாப்பிடுவதன் மூலமாக நம் உடலில் இருக்கும் இராஜ உறுப்புகள் அனைத்தும் சிறப்பாக செயல்படத் தொடங்கும்.  வலிமை பெறும். முகத்தில் தோல் சுருக்கம் ஏற்படாது. கண் பார்வை திறன் அதிகரிக்கும். இரத்த நாளங்களை சுத்தம் செய்து இரத்தத்தை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கல், வயிற்று பிரச்சனை, வாயுக் கோளாறு போன்ற பிரச்சனையையும் இது சரி செய்யும். வாழ்நாள் முழுவதும் கைகால் வலி, மூட்டு வலி இல்லாமல் இருக்க முடியும். இந்த மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

 

இதை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* தேன்

* மிளகு

 

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டில் எடுத்துக் கொள்ளவும். இந்த கண்ணாடி பாட்டிலில் 50 மிலி சுத்தமான தேனை சேர்த்துக் கொள்ளவும். 50 மிலி தேனுக்கு 10 மிளகு எடுத்து அதில் சேர்த்துக் கொள்ளவும்.

 

சேர்த்த பிறகு இதை மூடி வைத்துக் கொள்ளவும். இதை அப்படியே 2 வாரத்தில் இருந்து 3 வாரங்கள் வரை அப்படியே வைத்து விட வேண்டும். தேனில் கலந்துள்ள மிளகு நன்கு ஊற வேண்டும். அதிகபட்சம் மூன்று வாரங்கள் கூட அபப்டியே வைக்கலாம். மூன்று வாரம் கழித்து இதை பயன்படுத்தலாம்.

 

இதை பயன்படுத்தும் முறை…

 

இந்த மருந்தை ஒரு நாளுக்கு இரண்டு முறை சாப்பிடலாம். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேனுடன் 3 மிளகை வைத்து தேனுடன் சேர்த்து மெல்ல மெல்ல கடித்து சாப்பிட வேண்டும். இதே போல இரவு தூங்கச் செல்லும் முன்பு இந்த மருந்தை சாப்பிடலாம். இதை தொடர்ந்து எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

 

Previous articleDDA நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ரூ. 78,800 மாத சம்பளம்!!
Next articleமூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!