சர்க்கரை நோய்க்கு தாயகமாக திகழும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இந்நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.இன்னும் 5 ஆண்டில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 10 கோடியை எட்டிவிடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்க்கரை நோய் பாதிப்பு இந்தியர்களுக்கு அதிகம் ஏற்பட காரணம் மோசமான உணவுமுறை பழக்கம்தான்.கார்போஹைட்ரேட் உணவுகளால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடுகிறது.சர்க்கரை நோய் ஆளை மெல்ல மெல்ல உருக்கி எடுக்க கூடிய ஒரு நோயாகும்.இந்த நோயில் இருந்து மீள்வது என்பது மிகவும் கடினமான விஷயமாகும்.ஆனால் சில விஷயங்களை தொடர்ந்து முயற்சித்து வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.
1)துரித உணவுகள்
சர்க்கரை நோயாளிகள் துரித உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.ஆரோக்கியம் இல்லாத இதுபோன்ற உணவுகள் இரத்தத்தில் சர்க்கரைக்கு அளவை கூட்டிவிடும்.அதேபோல் அதிகமாக சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
2)நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உதவுகிறது.
3)நடைபயிற்சி
தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.சர்க்கரை நோயாளிகள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
4)வைட்டமின் டி சத்து
உடலில் வைட்டமின் டி சத்து அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.சூரிய ஒளியில் நடந்தால் வைட்டமின் டி சத்து கிடைக்கும்.பாக்கெட் உணவுகள்,கூல்ரிங்ஸ் போன்றவற்றை பருகினால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.எனவே இதுபோன்ற ஆரோக்கியம் இல்லாத உணவுப் பொருட்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.