இந்த ஒரு மருந்து இருந்தால் ஆயுசுக்கும் கேன்சரே வராது!!

Photo of author

By Sakthi

உங்களுக்கு புற்று நோய் வராமல் தடுக்க வேண்டுமா! அப்போ இந்த மருந்தை வாரத்திற்கு ஒரு முறை குடித்து பாருங்கள்!
புற்று நோய், இருதய நோய், குடல் சுத்தமாக இருக்க இந்த பதிவில் சொல்லப்படும் மருத்துவத்தை ஒரு வாரத்திற்கு ஒரு முறை செய்து பார்த்தால் போதும். இது போல எந்த பிரச்சனையும் உங்களுக்கு ஏற்படாது.
தேவையான பொருட்கள்;
* ஜியா விதைகள்
* பால்
* ஆரஞ்சு பழம்
இந்த மருந்தை தயார் செய்யும் முறை;
ஒரு நாள் முன்பு இரவே ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் ஜியா விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் காய்ச்சி ஆறிய பால் அரை டம்ளர் அளவு எடுத்து அதில் ஊற்றி இந்த பாத்திரத்தை மூடி வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் இது நன்றாக ஊறி இருக்கும்.
பிறகு மறுநாள் காலையில் ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை உறித்து அதில் உள்ள சுளைகளை எடுத்து அதில் இருக்கும் கொட்டைகளை நீக்கி மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து இந்த ஆரஞ்சு பழச் சாற்றை அந்த ஜியா விதைகளுடன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். சுவைக்காக தேவையான அளவு தேனை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்கு கலக்கி விட்டு அப்படியே குடிக்கலாம்.
இதை காலையில் குடித்தால் நன்கு பலன் கிடைக்கும். இதைக் குடித்து அரை மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடக் கூடாது. இதை தயாரித்து அரை மணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். அப்பொழுது தான் இதன் பலன் முழுமையாக கிடைக்கும்.
தூக்கமின்மை காரணத்தால் அவதிப்படுபவர்கள் இந்த ஜியா விதைகளை மதிய வேலையில் ஊற வைத்து பிறகு இதை இரவு நேரத்தில் குடிக்கலாம். நன்கு தூக்கம் வரும்.
ஜியா விதைகள் நல்லது என்றாலும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் வயிறு வலி, வயிறு வீக்கம், வாயுப் பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களின் பலன்கள்;
ஜியா விதைகள் நம் உடலில் செரிமான செயல்முறையை சரி படுத்தும். மூளை செல்கள் சேதம் அடைவதை தடுத்து மூளை ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்துகள், ஒமேகா 3 சத்துக்கள் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. இந்த ஜியா விதைகள் நமது உடலில் தோல், நகம், முடி, சதை ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கின்றது. ஜியா விதைகளில் இருக்கும் கால்சியம் நம் பற்களையும், எலும்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. இந்த ஜியா விதைகள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றது. இந்த ஜியா விதைகள் நம் சருமத்தில் உள்ள சுருக்கங்களை சரி செய்து நம் முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.
இதில் சேர்க்கப்படும் பால் நம் உடலுக்கு நல்ல சக்தியை கொடுக்கும். பாலில் கால்சியம் சத்து இருப்பதால் இதுவும் நம் உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றது.
இதில் சேர்க்கப்படும் ஆரஞ்சு பழம் நம் இதயத்தின் இரத்தக் குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகின்றது. ஜீரணச் சக்தியை அதிகப்படுத்தி நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழித்து வெளியேற்றுகின்றது. ஆரஞ்சு பழம் உடலில் உள்ள புற்று நோய் செல்களை அழித்து புற்று நோய் வராமல் தடுக்கின்றது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் ஆரஞ்சு பழத்தின் சாற்றை குடிக்க வேண்டும். இதில் இருக்கும் விட்டமின் சி நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.