கடன் பிரச்சனையில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டுமா..?? அப்போ இந்த பிரச்சனைக்கு காரணமாக விளங்கும் கேது பகவானை இப்படி வணங்குங்கள்..!!

Photo of author

By Janani

கடன் பிரச்சனையில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டுமா..?? அப்போ இந்த பிரச்சனைக்கு காரணமாக விளங்கும் கேது பகவானை இப்படி வணங்குங்கள்..!!

Janani

நமக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதனை சமாளித்து விடலாம். ஆனால் இந்த கடன் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தான் இன்று பலரும் திணறுகிறார்கள். கடன் பிரச்சனைகள் நமக்கு உருவாக வேண்டும் என, நமக்கு கொடுத்தவர் நவகிரகங்களில் உள்ள கேது பகவான் ஆவார். இவரை சாந்தப்படுத்தி கடன் பிரச்சனையில் இருந்து நாம் எவ்வாறு மீள முடியும் என்பது குறித்து தற்போது காண்போம்.

கடன் பிரச்சனையை உண்டாக்கக்கூடிய கேது பகவான் நம் ஜாதகத்தில் உட்கார்ந்து கொண்டு நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார். இனிமேல் கடனே வாங்க கூடாது என்று நினைத்தாலும், மீண்டும் கடனை வாங்க வைப்பதில் இவர் வல்லவர். இவரை சரி கட்டி விட்டால் விரைவில் கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு வரலாம்.

எதிர்பாராத நேரத்தில் ஒரு சிக்கலில் நம்மை மாட்டி விட்டு கடன் என்னும் அஸ்திரத்தை நம் மீது எரியும் கேது பகவானுக்கு உரிய தானியம் கொள்ளு. நமது உணவிலும் இந்த கொள்ளு தானியத்தை அடிக்கடி சேர்த்து சமைத்து வந்தால் கேது பகவானை நம் வழிக்கு கொண்டு வந்து விடலாம். கொள்ளு என்பது சிறுதானியங்களில் ஒன்று.

ஏராளமான சத்துக்கள் நிறைந்த இந்த கொள்ளு தானம் செய்வதன் மூலம் ஏராளமான நன்மைகள் நமக்கு உண்டாகும். தீராத கடன்கள் தீரவும் கொள்ளு தானம் செய்யலாம்.

16 நாட்கள் தொடர்ந்து அதிகாலையில் எழுந்து சூரியன் உதயம் ஆகும் நேரத்திற்குள் குளித்து முடித்துவிட்டு கையில் கொஞ்சம் கொள்ளு தானியத்தை வைத்துக்கொண்டு சூரியனைப் பார்த்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அதன் பிறகு 27 முறை அந்த தானியத்தை கொண்டு நம் தலையை வலம் இருந்து இடமாக சுற்றிக் கொள்ள வேண்டும். இது நம் கிரக தோஷங்களை நீக்கும் எளிய பரிகாரமாகும்.
கேது பகவானால் வரக்கூடிய துன்பங்கள் நீங்கி கேதுவின் அருள் கிடைக்கும் அற்புத பரிகாரமும் ஆகும்.

பின்பு அந்த கொள்ளு தானியங்களை பறவைகளுக்கு தானம் செய்ய வேண்டும். அதுபோல சூரியனின் வாகனமாக இருக்கக்கூடிய குதிரைகளுக்கும் கொள்ளு தானம் செய்யலாம். இந்த காலத்தில் குதிரைகளை எங்கு தேடி அலைவது என நினைத்தால் பறவைகளுக்கு இரையாக போட்டு விடலாம். அப்படி உங்கள் வீட்டிற்கு அருகாமையில் குதிரைகள் இருந்தால் நிச்சயம் குதிரைக்கு கொள்ளு தானம் செய்யுங்கள். கடன் பிரச்சினை தீரும்.

கொள்ளு என்பது சத்துக்கள் நிறைந்த அற்புதமான சிறுதானியம் ஆகும். இதனை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வதன் மூலமும் கேதுவின் அருள் உங்களுக்கு கிடைக்கும். அதேபோல் சனிக்கிழமை அன்று வீட்டில் கொள்ளு சமைத்தால் கேதுவால் ஏற்பட்ட கடன் பிரச்சனை தீரும்.

நவகிரக சன்னதிக்கு சென்று கேது பகவானுக்கு விளக்கு ஏற்றி வைத்து, மனதாரப் பிரார்த்தனை செய்து கொண்டு கொள்ளு தானத்தை ஏழை எளியவர்களுக்கு மாதத்திற்கு ஒரு முறையாவது செய்து வாருங்கள்.

ஜாதகத்தில் கேதுவால் பிரச்சனைகள் இருந்தாலும் கோவில்களுக்கு இந்த கொள்ளு தானியத்தை தானம் செய்யலாம். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாங்கி கொடுத்தால் போதும். அவர்கள் அதை சமைத்து சுவாமிக்கு படைத்து, அங்கு வரும் பக்தர்களுக்கு கொடுப்பார்கள்.

அதேபோல் நமது வீடுகளிலும் கொள்ளினை வேகவைத்து கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம். இந்த முறைகளில் நீங்கள் கொள்ளு தானம் செய்தால் விரைவிலேயே உங்களது கடன் முழுவதும் அடைந்து விடும் என்பது நம்பிக்கை.